துபாயில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்ட பிரதமரின் தனி விமானம் என பாஜக நபர் பதிவிட்டாரா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
” துபாயில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்ட பிரதமரின் தனி விமானம். குவியும் பாராட்டுக்கள்” என தமிழக பாஜகவைச் சேர்ந்த அன்பு செல்வனா என்பவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளதாக இந்த ஸ்க்ரீன்சார்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று (மே 26-ம் தேதி) பிரதமர் மோடி சென்னை வந்த நிலையில், இந்த ஸ்க்ரீன்சார்ட் திமுகவினரால் அதிகம் பகிரப்பட்டு இருக்கிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் பதிவு குறித்து தேடுகையில், தமிழக பாஜகவைச் சேர்ந்த அன்பு செல்வனா என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் ” துபாயில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்ட முதல்வரின் தனி விமானம். குவியும் பாராட்டுக்கள் ” என்றே மார்ச் 25-ம் தேதி பதிவிட்டு இருக்கிறார்.
துபாயில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்ட முதல்வரின் தனி விமானம்.
குவியும் பாராட்டுக்கள்.— Er Anbu selvana 🚩 (@anbu_selvana) March 25, 2022
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்ற போது தமிழக பாஜகவினர் இப்படியொரு பதிவை பரப்பிக் கொண்டிருந்தனர். அந்த பதிவில், முதல்வரின் என்ற இடத்தில் பிரதமரின் என மாற்றி எடிட் செய்து தற்போது வைரல் செய்து வருகிறார்கள்.
மேலும் படிக்க : குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மதிக்கவில்லையா ?
இதற்கு முன்பாக, ஜப்பானில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மதிக்கவில்லை என தவறாக வீடியோ பரவியதையும் பதிவிட்டு இருந்தோம்
முடிவு :
நம் தேடலில், துபாயில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்ட பிரதமரின் தனி விமானம், குவியும் பாராட்டுக்கள் என தமிழக பாஜகவைச் சேர்ந்தவர் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளதாக பரவும் ஸ்க்ரீன்சார்ட் எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.