This article is from May 17, 2019

மோடி காந்தியை கொன்ற கோட்சேக்கு மாலை அணிவித்து வணங்கினாரா ?

பரவிய செய்தி

காந்தியின் சிலைக்கு மாலை அணிவிக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காந்தியை கொன்ற கோட்சேவிற்கும் மாலை அணிவித்து வணங்கும் படங்கள் !

மதிப்பீடு

சுருக்கம்

இப்பொழுது பரவும் செய்திகள் போன்று முன்பு ஒருமுறை நரேந்திர மோடி கோட்சே சிலைக்கு மாலை அணிவித்து வணங்கியதாக தவறான செய்திகள் பரவி இருந்தன. இப்படத்தில் மோடி வணங்கும் நபர் யார் என்பதை காணலாம்.

விளக்கம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதேபோன்று, காந்தியை கொன்ற கோட்சேவிற்கும் மோடி மாலை அணிவித்து வணங்குகிறார் என இரு படங்களானது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகின்றன.

சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற பதிவை யார் பதிவிட்டாலும் பெரும்பான்மையான மக்கள் யார் ? எங்கே ? உண்மையா ? என்றெல்லாம் கேள்விகள் எழுப்புவதில்லை. சமூக வலைத்தளங்களில் பதிவிடும் செய்திகள் அனைத்து உண்மையானவை என பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆகையால், இவ்வாறு பரவிய செய்திகளில் இருக்கும் படத்தின் உண்மைத்தன்மையை பற்றி ஆராய , கூகுளில் கடந்த கால நிகழ்வுகள் குறித்து தேடுகையில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தும் படம் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி பாரதிய ஜனதா கட்சி தொடங்கி 37 ஆண்டுகள் நிறைவடைந்த நாள் கொண்டாடப்பட்டது. இதற்காக டெல்லியில் உள்ள பிஜேபி கட்சி தலைமையகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, அக்கட்சியின் தலைவர் அமித்ஷா மற்றும் மூத்த தலைவர்கள் பலரும் வருகைத் தந்திருந்தனர்.

அப்பொழுது, அக்கட்சியின் சிந்தனையாளரான பண்டித் தீன்தயாள் உபதய்யா-வின் சிலையின் முன் நின்று பிரதமர் மோடி மரியாதை செலுத்தும் படம் இந்தியா டுடே செய்தியில் வெளியாகி இருக்கிறது.

பிரதமர் மோடி பண்டித் தீன்தயாள் உபதய்யா-வின் சிலையின் முன் நின்று வணங்கும் படத்தையே கேட்சேவின் சிலையின் முன் நின்று வணங்குவதாக தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். ஆக, பிரதமர் மோடி வணங்கும் சிலை கேட்சேவின் சிலை அல்ல என்பது தற்பொழுது நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : காந்தியை கொன்ற கோட்சேவை மோடி வணங்கினாரா ?

இதற்கு முன்பாக பிரதமர் மோடி காந்தியின் சிலையை வணங்கவில்லை, காந்தியை கொன்ற கேட்சேவின் சிலையை வணங்குவதாக வதந்தியை பரப்பி இருந்தனர். ஆனால், அந்த படத்தில் இருந்தது ஆர்.எஸ்.எஸ்-யின் வீர் சவர்க்கர் உடைய சிலை என தெளிவுப்படுத்தி பதிவிட்டு இருந்தோம்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader