பிரதமர் மோடியையும், ஹிட்லரையும் ஒப்பிட்டு பரவும் புகைப்படம்.. உண்மை என்ன ?

பரவிய செய்தி
வரலாறு திரும்புகிறது… எதிர்காலம் முள்வேலிக்கு பின்னால் உள்ளது..Twitter link | Archive link
மதிப்பீடு
விளக்கம்
பிரதமர் மோடியையும், ஹிட்லரையும் ஒப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், மோடி மற்றும் ஹிட்லருக்கு அருகே முள் வேலிக்கு பின்னால் இருக்கும் குழந்தைகள் நிற்கிறார்கள். இப்படத்தை நடிகர் பிரகாஷ் ராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், வரலாறு திரும்புகிறது எனப் பதிவிட்டு இருக்கிறார்.
யாரோ ரொம்ப மெனக்கெட்டு கஷ்டப்பட்டு எடுத்திருக்காங்க…. pic.twitter.com/a0yt1kYaDj
— Phoenix Jayaseelan-INC🇮🇳 (@PhoenixJaiSeela) May 3, 2023
உண்மை என்ன ?
பிரதமர் மோடி முள் வேலிக்கு பின்னால் நிற்கும் குழந்தைகளுடன் பேசும் புகைப்படம் 2023 மே மாதம் கர்நாடகா மாநிலம் தேர்தல் பிரச்சாரத்தின் போது எடுக்கப்பட்டது.
#WATCH | Karnataka: Prime Minister Narendra Modi had a light-hearted interaction with children in Kalaburagi earlier today, before the roadshow here. pic.twitter.com/HYOoei56xf
— ANI (@ANI) May 2, 2023
2023 மே 2ம் தேதி கர்நாடகாவின் கலபுரகி பகுதியில் சாலை அணிவகுப்பு நிகழ்சிக்கு முன்பாக குழந்தைகளுடன் பிரதமர் மோடி பேசிய போது எடுக்கப்பட்ட வீடியோ ஏஎன்ஐ செய்தி முகமையில் வெளியாகி இருக்கிறது.
இந்த வீடியோ வெளியான போதே, பிரதமர் மோடி முள் வேலிக்கு பின்னால் இருக்கும் குழந்தைகளின் கையை தொட மறுத்ததாகவும். குழந்தைகளை முள் வேலிக்கு பின்னால் நிற்க வைத்து பேசியது நியாயமா என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
அடுத்ததாக, ஹிட்லருக்கு அருகே முள் வேலிக்கு பின்னால் குழந்தைகள் நிற்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், அது வெவ்வேறு புகைப்படங்கள் என்பதை அறிய முடிந்தது.
முள் வேலிகளுக்கு பின்னால் குழந்தைகள் நிற்கும் புகைப்படம் தி கார்டியன் செய்திக் கட்டுரையில் இடம்பெற்று இருக்கிறது. அப்புகைப்படத்திற்கு கீழே, ” 1945ல் செம்படையால் விடுவிக்கப்பட்ட ஆஷ்விட்ஸ் மரண முகாமில் உயிர் பிழைத்த குழந்தைகள் ” எனக் கூறப்பட்டுள்ளது.
அடுத்ததாக ஹிட்லரின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், புகைப்பட விற்பனை தளமான Alamy இணையதளத்தில் இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
மேலும் படிக்க : என்னை வெறுங்கள், நாட்டை வெறுக்காதீர்கள் ? ஹிட்லர், மோடி பேச்சில் ஒற்றுமையா?
மேலும் படிக்க : ” நான் தவறாக இருந்தால் உயிருடன் என்னை எரியுங்கள் ” ஹிட்லர் கூறினாரா ?
இதற்கு முன்பாக, பிரதமர் மோடி மற்றும் ஹட்லரை ஒப்பிட்டு பரப்பப்பட்ட பிற தவறான தகவல்கள் குறித்தும் கட்டுரைகள் வெளியிட்டு இருக்கிறோம்.
முடிவு :
நம் தேடலில், முள் வேலிகளுக்கு பின்னால் இருக்கும் குழந்தைகளுடன் பிரதமர் மோடி பேசும் புகைப்படம் சில நாட்களுக்கு முன்பாக கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தின் போது எடுக்கப்பட்டது.
அடுத்ததாக, ஹிட்லர் மற்றும் முள் வேலிகளுக்கு பின்னால் குழந்தைகள் இருக்கும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.