என்னை வெறுங்கள், நாட்டை வெறுக்காதீர்கள் ? ஹிட்லர், மோடி பேச்சில் ஒற்றுமையா?

பரவிய செய்தி

ஹிட்லர் பேச்சையும் கேளுங்கள் மோடியின் பேச்சையும் கேளுங்கள். நீங்கள் என்னை வெறுக்கலாம், ஆனால் ஜெர்மனியை வெறுக்காதீர்கள் – ஹிட்லர் , நீங்கள் என்னை வெறுக்கலாம் , ஆனால் இந்திய தேசத்தை வெறுக்காதீர்கள் – மோடி.

Facebook link | archived link 

மதிப்பீடு

விளக்கம்

அரசியல் களத்தில் இந்திய பிரதமர் மோடியின் பேச்சுக்களும், ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்த அடால்ஃப் ஹிட்லர் உடைய பேச்சுக்களும் ஒற்றுமையாக இருப்பதாக  சமூக வலைதளங்களில் ஒரு கருத்து மேலோங்கி வருவதை காண முடிகிறது. இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்புகள் நிலவி வரும் வேளையில், பிரதமர் மோடியின் பேச்சும், ஹில்டரின் முந்தைய பேச்சும் ஒன்றாக இருப்பதாக ஓர் வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

Facebook link | archived link  

முதலில் ஹிட்லர் பேசும் காட்சியின் கீழே இடம்பெறும் மொழிப்பெயர்ப்பில் ” யார் என்னை வெறுக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். என்னை வெறுத்துக் கொள்ளுங்கள். ஆனால் நாட்டைச் வெறுக்காதீர்கள் ” என்ற வாசகம் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதேபோல், இந்திய பிரதமர் மோடி பேசிய வீடியோ காட்சியின் கீழே மொழிப் பெயர்ப்பில், ” யார் என்னை வெறுக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். என்னை வெறுத்துக் கொள்ளுங்கள். ஆனால் நாட்டைச் வெறுக்காதீர்கள் ” என்ற வாசகமே மீண்டும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதை வைத்து மீம் பதிவுகளும் தமிழில் பரவி வருகிறது.

Twitter link | archived link

இதைத் தமிழில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் அரசியல் கட்சியினர் முதல் பொதுமக்கள் வரை பலரும் பகிர்ந்து வந்துள்ளனர். மேலும், இந்திய இளைஞர் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ” आप मुझसे नफरत करो लेकिन देश से नफरत मत करो – प्रधानमंत्री नरेंद्र मोदी Hate me, But don’t hate Germany – Adolf Hitler जर्मनी हम शर्मिंदा है, हिटलर अभी जिंदा है ” (நீங்கள் என்னை வெறுக்கலாம் , ஆனால் தேசத்தை வெறுக்க வேண்டாம் – பிரதமர் மோடி. என்னை வெறுங்கள் , ஆனால் ஜெர்மனியை வெறுக்க வேண்டாம் – அடால்ஃப் ஹிட்லர். ஜெர்மனி நாங்கள் வெட்கப்படுகிறோம் , ஹிட்லர் இன்னும் உயிருடன் இருக்கிறார்) எனப் பதிவிட்டு உள்ளனர்.

உண்மை என்ன ? 

டிசம்பர் 22-ம் தேதி டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற மெகா பேரணியின் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி ” மோடியின் உருவ பொம்மையை எரிக்கவும், ஆனால் பொது சொத்துக்களை எரிக்க வேண்டாம். நீங்கள் விரும்பினால் என்னை வெறுக்கலாம், ஆனால் இந்தியாவை வெறுக்க வேண்டாம். என் உருவத்தை எரிக்கவும், ஆனால் ஒரு ஏழையின் ஆட்டோ ரிக்சாவை எரிக்க வேண்டாம் ” என இந்தியில் கூறியதாக நியூஸ் 18 இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. ஆகையால் ” என்னை வெறுங்கள், நாட்டை வெறுக்காதீர்கள் ” என்ற தலைப்பில் ஊடகங்களில் செய்தியாக வெளியாகத் தொடங்கியது.

அடுத்ததாக, ஹிட்லர் ஜெர்மானிய மொழியில் பேசும் 0.15 வினாடிகள் கொண்ட வீடியோவில் என்ன பேசி இருந்தார் என்பது குறித்து பார்க்கையில் , ” வைரலாகும் வீடியோவின் வலப்பக்க ஓரத்தில் ” British pathe ” என்ற லோகோ இடம்பெற்று உள்ளது. British pathe என்ற யூடியூப் சேனலில் பல நாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட பழைய வீடியோக்கள் பலவும் வெளியிடப்பட்டு இருக்கும். அவற்றில், ” Nazi rally – winter 1936 ” என்ற தலைப்பில் ஹிட்லர் பேசும் வீடியோ கடந்த 2014-ல் வெளியாகி இருக்கிறது.

Youtube link | archived link

1.50 நிமிடம் கொண்ட இந்த வீடியோவில் இடம்பெற்ற ஹிட்லரின் உரையில் இருந்து 0.15 வினாடிகள் மட்டும் எடுக்கப்பட்டு தற்போது வைரல் செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவின் தொடக்கத்தில் ” Winterhilfswerk ” என்ற வார்த்தை பெரிதாய் காட்சி அளிக்கும். Winterhilfswerk என்பது நாசிக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட தொண்டு பணிகளுக்கு நிதி அளிப்பதற்கான வருடாந்திர தூண்டுதலை குறிக்கிறது. British pathe வெளியிட்ட வீடியோவில் மொழிப்பெயர்போ அல்லது பிற விவரங்களோ அளிக்கப்படவில்லை.

0.15 நொடிகள் கொண்ட வீடியோ பதிவில் ஹிட்லர் ஜெர்மானிய மொழியில் , ” உங்களின் சகோதரராக அனைவரும் இருக்க வேண்டியதில்லை, ஆனால் நீங்கள் பிரஜைகளிடம் செல்ல வேண்டும் மற்றும் அவர்களின் பாரபட்சங்களை தீர்த்து, அவர்களுக்கு மீண்டும் மீண்டும் உதவுங்கள்…. ‘ சகோதரர்கள் ‘ பற்றி பேசுவது எளிமையான பேச்சால் மட்டுமல்ல , மக்கள் மத்தியில் அவர்களின் பாரபட்சங்களை படிப்படியாக சமாளிக்கவும் , உதவி செய்யவும் மற்றும் மீண்டும் ஒருமுறை உதவவும் ” என பேசி இருப்பதாக பூம் இணையதளத்தில் மொழிபெயர்ப்பை வெளியிடப்பட்டு உள்ளது.

Twitter link | archived link

இதேபோல், இந்தியாவில் வசிக்கும் ஜெர்மன் எழுத்தாளரான Maria Wirth என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில், ” முற்றிலும் தவறான மொழிப்பெயர்ப்பு ” என ஹிட்லர் மற்றும் மோடி பேச்சு குறித்த செய்தி தொடர்பாக பதிவிட்டு இருக்கிறார்.

Twitter link | archived link 

பிரதமர் மோடியின் பேச்சுடன் தொடர்புப்படுத்தி வைரல் செய்யப்படும் ஹிட்லரின் உரை இடம்பெற்ற வீடியோ காட்சியில், அவர் என்னை வெறுங்கள், ஆனால் ஜெர்மனியை வெறுக்காதீர்கள் என எங்கும் கூறவில்லை. அங்கு ஹிட்லர் பேசிய வார்த்தைகளே வேறாக இருக்கிறது. அவற்றை மொழிப் பெயர்ப்பு மற்றும் ஜெர்மானிய எழுத்தாளர் அளித்த தரவுகளில் இருந்து அறிய முடிகிறது.

இதை அறியாமல், ஹிட்லரின் மறு உருவமாக மோடி இருப்பதாகவும், இருவரின் பேச்சுக்களும் ஒன்றாக இருப்பதாக மக்கள் ஆச்சரியப்படும் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். ஹிட்லர் மற்றும் மோடி ஆகிய இருவரையும் இணைத்து பொய்யான தகவலை பரப்புவது இது முதல்முறை அல்ல.

மேலும் படிக்க : ” நான் தவறாக இருந்தால் உயிருடன் என்னை எரியுங்கள் ” ஹிட்லர் கூறினாரா ?

இதற்கு முன்னால் ” Burn me alive if I am wrong ” என ஹிட்லர் கூறிய வார்த்தையை பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது பேசியதாக வதந்தியை பரப்பி இருந்தனர். அதேபோல் தற்பொழுதும், தவறான தகவலை இந்திய பிரதமர் மோடியுடன் இணைத்து பரப்பி வருகின்றனர்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம் / Proof Links

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
PHP Code Snippets Powered By : XYZScripts.com
Close
Close