டைம் இதழ் மோடியையும், ஹிட்லரையும் ஒப்பிட்டு அட்டைப் படம் வெளியிட்டதா ?

பரவிய செய்தி

மதிப்பீடு

விளக்கம்

பிரபல பத்திரிகையான டைம் இதழின் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும், ஹிட்லரையும் இணைத்து ” The Return of  History. How modi shattered india’s dreams ” எனும் வாசகத்துடன் அட்டைப் படத்தை வெளியிட்டதாக இப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Archive link 

உண்மை என்ன ? 

டைம் பத்திரிகையின் இணையதளத்தில் உள்ள பெட்டகத்தில் 2022-ம் ஆண்டில் பிரதமர் மோடி புகைப்படத்துடன் எந்தவொரு அட்டைப் படமும் வெளியாகவில்லை.

2019-ம் ஆண்டு இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தலின் போது, ” India’s Divider in chief ” எனும் வாசகத்துடன் கூடிய அட்டைப் படம் ஒன்றை டைம் ட்விட்டரில் பதிவிட்டு இருந்துள்ளது.

Twitter link 

2022 பிப்ரவரி 26-ம் தேதி உக்ரைனைச் சேர்ந்த கிராபிக் டிசைனர் பட்ரிக் முல்டேர் என்பவர், டைம் இதழில் ரஷ்ய அதிபர் புதினையும், ஹிட்லரையும் இணைத்து எப்படி அட்டைப் படத்தை வெளியிட்டேன் என எடிட் செய்ததை ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

Twitter link 

டைம் இதழில் புதின் மற்றும் ஹிட்லர் படத்தை வைத்து எடிட் செய்தது போன்று பிரதமர் மோடி மற்றும் ஹிட்லர் படத்தை வைத்து எடிட் செய்து இந்தியாவில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

முடிவு : 

நம் தேடலில், டைம் பத்திரிகையில் பிரதமர் நரேந்திர மோடியும், ஹிட்லர் படமும் இணைக்கப்பட்டு அட்டைப் படம் வெளியாகி உள்ளதாக பரவும் படம் எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader