மோடி பத்திரிகை சந்திப்பு வேண்டாமென கமலா ஹாரிஸிடம் கோரிக்கை வைத்ததாக போலிச் செய்தி !

பரவிய செய்தி
தனக்கு கடந்த ஏழு வருடங்களாக ஊடக ஒவ்வாமை இருப்பதால் அமெரிக்கப் பயணத்தில் ஊடக சந்திப்புகள் ஏதும் வேண்டாம் என்று கமலா ஹாரிசிடம் பிரதமர் மோடி கோரிக்கை.
மதிப்பீடு
விளக்கம்
அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ” தனக்கு கடந்த ஏழு வருடங்களாக ஊடக ஒவ்வாமை இருப்பதால் அமெரிக்கப் பயணத்தில் ஊடக சந்திப்புகள் ஏதும் வேண்டாம் என்று கமலா ஹாரிசிடம் கோரிக்கை ” வைத்ததாக புதிய தலைமுறையின் போலியான நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செப்டம்பர் 24-ம் தேதி, ” கமலா ஹாரிஸை வரவேற்க இந்தியர்கள் காத்திருப்பதால் விரைவில் இந்தியா வர வேண்டும் – பிரதமர் மோடி ” என்ற செய்தியே புதியதலைமுறையில் வெளியாகி இருக்கிறது.
மேற்காணும் நியூஸ் கார்டில் போலியான செய்தியை எடிட் செய்து கிண்டல் செய்து பரப்பி வருகிறார்கள். இதைப் பார்ப்பதற்கு எடிட் செய்தது எனத் தெளிவாக தெரிந்தாலும் சிலர் அதை அறியாமலேயே பகிர்ந்து வருகிறார்கள்.
மேலும் படிக்க : பிரதமர் மோடிக்கு கொரோனா வழிமுறைகளை பயிற்றுவிக்க வாஷிங்டன் நீதிமன்றம் உத்தரவா ?
இதேபோல், பிரதமர் மோடிக்கு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பயிற்றுவிக்க வாஷிங்டன் நீதிமன்றம் உத்தரவிட்டதாக வதந்தியை பரப்பி இருந்தனர்.
முடிவு :
நம் தேடலில், தனக்கு கடந்த ஏழு வருடங்களாக ஊடக ஒவ்வாமை இருப்பதால் அமெரிக்கப் பயணத்தில் ஊடக சந்திப்புகள் ஏதும் வேண்டாம் என்று கமலா ஹாரிசிடம் பிரதமர் மோடி கோரிக்கை என பரவும் புதியதலைமுறை நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.