மோடி மகாபலிபுரம் கடற்கரையில் நடத்திய ஷூட்டிங் என வைரலாகும் புகைப்படம் உண்மையா ?

பரவிய செய்தி

உங்கள் அபிமான தொலைக்காட்சிகளில்….வெற்றிநடைப்போடுகிறது…. “ஒரு குப்பைக்கதை!!” கதை , திரைக்கதை , வசனம் , ஒளிப்பதிவு , கலை , உடை, ஒப்பனை ,அரங்கப் பொருட்கள்(set properties) இயக்கம் ‘நடிகர் கிரீடம்’ ‘ஆஸ்கார் ஆப்பிள்’ நரேந்திர மோடி .

மதிப்பீடு

விளக்கம்

சீனத் தலைவர் ஜி ஜின்பிங் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பும் தமிழகத்தின் மகாபலிபுரத்தில் நடைபெற்றது. இருவரின் சந்திப்பிற்கு பிறகு பிரதமர் மோடி மகாபலிபுரம் கடற்கரையில் இருக்கும் குப்பைகளை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்ட வீடியோ ஊடகங்கள் , சமூக வலைதளங்களில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement

Twitter post archived link  

பிரதமர் மோடி கடற்கரையில் இருக்கும் குப்பைகளை ஒரு பையில் எடுத்துக் கொண்டு வரும் வீடியோ அவரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவாகி இருந்தது. அதுமட்டுமின்றி, பிரதமர் மோடி கடற்கரையில் இருக்கும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், கடற்கரையில் குப்பையை நீக்குவது போல் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிக்கு பின்னால் மிகப்பெரிய ஷூட்டிங் குழுவே இருப்பது போன்ற புகைப்படமும் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Twitter archived link 

மேலும், சிவகங்கை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தன் ட்விட்டர் பக்கத்தில் மேற்காணும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். ஆனால், கடற்கரையில் ஒரு குழு ஷூட்டிங் செய்வது போன்று இருக்கும் புகைப்படத்திற்கு பிரதமர் மோடியின் பிற புகைப்படங்களுக்கு தொடர்பில்லை. ஏனெனில், அந்த புகைப்படத்தில் மலைப் பகுதி போன்று தென்படுவதை காண முடிந்தது.

இதையடுத்து , அப்புகைப்படத்தினை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து பார்க்கையில் , ஸ்காட்லாந்து நாட்டின் பிரபல ஷூட்டிங் தலமான வெஸ்ட் ஸ்டண்ட் பீச் பகுதியைச் சேர்ந்த புகைப்படம் என அறிந்து கொள்ள முடிந்தது. 2013-ல் Tayscreen.com என்ற தளத்தில் வைரலாகும் படத்தின் உண்மையான பதிப்பு இடம்பெற்று இருக்கிறது.

பிரதமர் மோடி மகாபலிபுரத்தின் கடற்கரையில் குப்பைகளை அகற்றும் வீடியோ, புகைப்படங்களுக்கு பின்னால் பெரிய ஷூட்டிங் குழு இருப்பதாக வைரலாகும் புகைப்படங்கள் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த கடற்கரை என நமக்கு கிடைத்த ஆதாரத்தில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

இந்திய பிரதமர் கடற்கைரையில் குப்பைகளை அகற்றும் வீடியோ மற்றும் புகைப்படங்களுக்கு எத்தனை புகைப்பட கலைஞர்கள் பயன்படுத்தப்பட்டனர் என்பது குறித்து தெரியவில்லை. எனினும் , தற்பொழுது வைரலாகும் புகைப்படங்கள் தவறானவையே.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம் / Proof Links

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button