பிரதமர் மோடி முகேஷ் அம்பானி பேரனைக் காணச் சென்றதாக பரவும் பழைய புகைப்படம் !

பரவிய செய்தி
பாஜக பிளிஸ் டேக் டைவர்சன். கொட்டும் கொடூர பனியில் 17வது நாளாக போராடும் 32 லட்ச விவசாயிகளை பார்த்து ஆறுதாலாக டீல் பேசுவேன்னு நினைச்சியாடா. நான் #evmfraud மோடிடா. அடிச்சி பிடிச்சி மாஸ்க் கூட போடாம social distance கூட பார்க்காம யெஸ் #அம்பானி பேரனை தான்டா. அப்படி தான் விழுந்தடிச்சி போய் பார்ப்பேன் டா. காரணம் இது எங்க குஜ்ஜு வாரிசு டா.
மதிப்பீடு
விளக்கம்
முகேஷ் அம்பானியின் பேரனைக் காண சென்ற பிரதமர் எனும் தவறான கூற்றுடன் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி ஆகியோருடன் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி இருக்கும் புகைப்படம் இந்திய அளவில் பகிரப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி கொரோனா காலத்தில் நீளமான தாடி, மீசை என தன் தோற்றத்தை முற்றிலும் மாற்றினார். சமூக வலைதளங்களில் பரப்பப்படும் இப்புகைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட பழைய புகைப்படமே.
முகேஷ் அம்பானி, மோடி, மருத்துவமனை என்கிற முக்கிய வார்த்தைகளைக் கொண்டு தேடுகையில், 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மும்பையில் ” HN Reliance Foundation Hospital ” திறப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படமே என அறிய முடிந்தது.
டிசம்பர் 10-ம் தேதி முகேஷ் அம்பானி தன் பேரக் குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஊடகங்களில், சமூக வலைதளங்களில் தலைப்பு செய்தியாக மாறியது. அதை வைத்து பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் வகையில் பழைய புகைப்படத்தை பரப்பி வருகிறார்கள்.