This article is from May 22, 2021

நியூயார்க் டைம்ஸ் பிரதமர் மோடி அழுவதாக முதலைப் படத்தை வெளியிடவில்லை !

பரவிய செய்தி

மதிப்பீடு

விளக்கம்

கொரோனா 2-ம் அலை தொடர்பாக வாரணாசியில் மருத்துவர்கள், முன்களப்பணியாளர்கள் உடன் பிரதமர் மோடி காணொளி மூலம் ஆலோசனை நடத்திய போது, கொரோனாவால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் மற்றும் இந்த அலை நம்மிடம் இருந்து அன்பிற்குரிய பலரை பறித்துவிட்டதாகவும் பேசும் போது கண்கலங்கியதாக இந்திய அளவில் செய்திகள் வெளியாகியது.

இதையடுத்து, தி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளின் முகப்பு பக்கத்தில், இந்திய பிரதமரின் அழுகை என முதலைக் கண்ணீர் வடிக்கும் புகைப்படத்துடன் வெளியாகியதாக செய்தித்தாளின் பக்கம் ஒன்று இந்திய அளவில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

Archive link 

உண்மை என்ன ?

நியூயார்க் டைம்ஸ் செய்தி இணையதளத்தை ஆராய்கையில், அவ்வாறான எந்த செய்தியும் வெளியாகவில்லை. இதையடுத்து, மே 21ம் தேதி வெளியான செய்தித்தாள் பக்கம் குறித்து தேடுகையில், முகப்பு பக்கத்தில் வேறு செய்தி வெளியாகி இருக்கிறது.

சிரியா பற்றி வெளியான புகைப்படத்தில் முதலையின் புகைப்படத்தை வைத்து எடிட் செய்து பரப்பி இருக்கிறார்கள்.

தி டெய்லி நியூயார்க் டைம்ஸ் எனும் பகடி செய்யும் ட்விட்டர் பக்கத்தில், செய்தித்தாளின் புகைப்படம் நையாண்டி எனக் குறிப்பிட்டு இப்புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்கள். பகடி செய்ய தவறாக எடிட் செய்த புகைப்படம் உண்மை என நினைத்தும், கிண்டல் செய்தும் பரப்பப்பட்டு வருகிறது.

Twitter link | Archive link 

முடிவு :

நம் தேடலில், இந்திய பிரதமர் அழுவதாக முதலைக் கண்ணீர் வடிக்கும் புகைப்படத்தை நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிடவில்லை, அது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

https://static01.nyt.com/images/2021/05/21/nytfrontpage/INYT_frontpage_global.20210521.pdf

Back to top button
loader