பிரதமர் மோடி பூமியின் இறுதி நம்பிக்கை என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டதா ?

பரவிய செய்தி
உலகின் மிகவும் பிரியமான மற்றும் சக்திவாய்ந்த தலைவர் எனவும் பூமியின் இறுதி நம்பிக்கை எனவும் பிரதம மந்திரி நரேந்திரமோடி அவர்களுக்கு புகழாரம் அமெரிக்காவின் தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை கருத்து
மதிப்பீடு
விளக்கம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க பயணத்தை நிறைவு செய்த பிறகு நேற்று இந்தியா திரும்பினார். இந்நிலையில், பிரதமர் மோடியை உலகின் சக்திவாய்ந்த தலைவர் என்றும், பூமியின் இறுதி நம்பிக்கை என அமெரிக்காவின் தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டதாக அந்த செய்தித்தாளின் பக்கம் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
தி நியூயார்க்டைம்ஸ் நாளிதழ் பக்கத்தில் 2021 செப்டம்பர் 26-ம் தேதியன்று பிரதமர் மோடி குறித்த செய்தி இடம்பெறவில்லை. மாறாக, வேறொரு செய்தியே வெளியாகி இருக்கிறது.
மேலும், வைரல் செய்யப்படும் பக்கத்தில் செப்டம்பர் மாதம் ஆங்கிலத்தில் எழுத்துப்பிழை உடன் இருப்பதை பார்க்கலாம். அதேபோல், மோடி கையெழுத்திடும் புகைப்படத்திற்கு கீழே, ” அவரது மேன்மை, மோடிஜி நம் நாட்டை ஆசீர்வதிக்க வெற்று ஏ4 தாளில் கையெழுத்திடுகிறார் ” என்ற வாக்கியம் இடம்பெற்று இருக்கிறது.
மேலும் படிக்க : நியூயார்க் டைம்ஸ் பிரதமர் மோடி அழுவதாக முதலைப் படத்தை வெளியிடவில்லை !
இதற்கு முன்பாகவும், தி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளின் முகப்பு பக்கத்தில் இந்திய பிரதமரின் அழுகை என முதலைக் கண்ணீர் வடிக்கும் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியதாக எடிட் செய்யப்பட்ட பக்கம் வைரலானது.
முடிவு :
நம் தேடலில், உலகின் மிகவும் பிரியமான மற்றும் சக்திவாய்ந்த தலைவர் என்றும், பூமியின் இறுதி நம்பிக்கை என்றும் பிரதமர் மோடியை புகழ்ந்து தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டதாக பரப்பப்படும் செய்தித்தாள் பக்கம் எடிட் செய்யப்பட்ட போலியானது என அறிய முடிகிறது.