This article is from Mar 20, 2021

நரேந்திர மோடி பாகிஸ்தான் இந்துக்களை முகாமில் சந்தித்த புகைப்படமா ?

பரவிய செய்தி

இது 31 வயதுடைய ஒரு அரிய படம், நரேந்திர மோடி ஜீ பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்த இந்துக்களை சந்திக்க முகாமுக்கு வந்தபோது. அவர் குஜராத் முதல்வராகவோ அல்லது நாட்டின் பிரதமராகவோ இல்லை. துக்கத்தில் மக்களுடன் நிற்பது இயல்பு. அதனால்தான் நாங்கள் அவருக்கு நிரந்தர ஆதரவாளர்கள்.

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

பாகிஸ்தான் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இந்துக்களை சந்திக்க முகாமிற்கு வந்த போது எனக் கூறி பிரதமர் நரேந்திர மோடி இளமை காலத்தில் மக்களிடம் பேசிக் கொண்டிருக்கும் பழைய புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதை காண நேரிட்டது.

Archive link 

இதே புகைப்படம் மற்றும் பதிவை இந்திய அளவில் பிற மொழிகளிலும் பகிர்ந்து வருவதை பார்க்க முடிந்தது. நடிகரான கஜேந்திர செளகான் என்பவர் ட்விட்டரில், மோடி பாகிஸ்தான் நாட்டில் இருந்து இடம்பெயர்ந்த இந்துக்களை பார்மர் முகாமில் சந்தித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழில் முகாம் என பொதுவாகக் கூறப்பட்டுள்ளது.

உண்மை என்ன ?

இணையத்தில் பரவும் நரேந்திர மோடியின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், www.narendramodi.in எனும் வலைதளத்தில் நரேந்திர மோடியின் சிறுவயது முதல் எடுக்கப்பட்ட கருப்பு வெள்ளை புகைப்படங்கள் உடன் அவர் பற்றிய தகவல்கள் அளிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த வலைதளத்தில், எமர்ஜென்சி குறித்த தலைப்பிற்கு கீழே வைரல் செய்யப்படும் இடம்பெற்று உள்ளது. புகைப்படத்திற்கு கீழே, குஜராத் மாநிலத்தின் கிராமத்தில் நரேந்திர மோடி என துணை தலைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதில் பாகிஸ்தான் இந்துக்கள் அல்லது அகதிகள் முகாம் என்ற எந்தவொரு வார்த்தையும் இடம்பெறவில்லை.

புகைப்படத்திற்கு கீழே, ” 1980களின் முற்பகுதியில் குஜராத் மாநிலம் முழுவதும் அவரது பயணங்கள் அதிகரித்தன. இது மாநிலத்தின் ஒவ்வொரு தாலுகா மாற்றும் ஒவ்வொரு கிராமத்தையும் பார்வையிட அவருக்கு வாய்ப்பளித்தது ” எனக் கூறப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் முகாமில் இருந்த இந்துக்களை சந்தித்ததாக எந்த தகவல்களும் இல்லை. 2014-ல் நாடாளுமன்ற தேர்தலில் பார்மர் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தின் போது, ”  பாகிஸ்தான் நாட்டில் இருந்து இடம்பெயர்ந்த இந்துக்கள் மற்ற இந்திய குடிமகன்களை போலவே சமமாக நடத்தப்படுவார்கள் ” எனப் பேசி இருந்தார்.

முடிவு :

நம் தேடலில், பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்த இந்துக்களை முகாமில் சந்தித்ததாக பரப்பப்படும் புகைப்படம் முகாமில் எடுக்கப்பட்டது அல்ல, 1980களில் குஜராத் கிராமங்களில் எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader