பிரதமர் மோடிக்காக 365 நாட்களும் உழைக்கும் புகைப்பட கலைஞர் எனப் பரவும் எடிட் படம் !

பரவிய செய்தி

ஒரு நாளைக்கு 18-20 மணி நேரம் என ஆண்டிற்கு 365 நாட்களும் உழைக்கும் நபர்.. மோடி புகைப்பட கலைஞர் !!

Twitter link 

மதிப்பீடு

விளக்கம்

புகைப்பட கலைஞர் ஒருவர் தரையில் படுத்த நிலையில் பிரதமர் மோடி நடந்து செல்வதை புகைப்படம் எடுப்பதாகவும், பிரதமருக்காக 365 நாட்களும் இந்த புகைப்பட கலைஞர் உழைப்பதாகவும் இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ? 

பிரதமர் நரேந்திர மோடி கேமரா மீது அலாதி பிரியம் கொண்டவர். அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் மக்களை சந்தித்து கையசைத்து கொண்ட காரில் செல்லும் போது அவரை சுற்றிப் புகைப்பட கலைஞர் காரில் தொங்கிய நிலையில் புகைப்படம் எடுத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதையடுத்து, பிரதமர் மோடி கேமராவில் இருந்து தன்னை மறைப்பவர்களை நகர்த்தும் வீடியோ காட்சிகளும் வைரலாகி வருகின்றன.

மேலும் படிக்க : பிரதமர் மோடிக்காக அதிகம் உழைக்கும் புகைப்படக் கலைஞர்கள்.. வைரல் வீடியோ எப்போது எடுக்கப்பட்டது ?

இதற்கிடையில், பிரதமர் மோடியை தரையில் படுத்த நிலையில் புகைப்பட கலைஞர் ஒருவர் படம் பிடிப்பதாக வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து பார்க்கையில், ” 2021 அக்டோபர் 2ம் தேதி Siaset எனும் செய்தி இணையதளத்தில் உண்மையான புகைப்படம் இடம்பெற்று இருந்தது நமக்கு கிடைத்தது.

2021ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் சமாதியில் பிரதமர் மோடி மரியாதை செலுத்திய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ நரேந்திர மோடி ட்விட்டர் பக்கம் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் யூடியூப் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.

Twitter link 

கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தி தினத்தில் டெல்லியில் உள்ள காந்தி சமாதியில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தி சுற்றி வரும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் புகைப்பட கலைஞர் ஒருவர் தரையில் இருந்து புகைப்படம் எடுப்பது போன்று எடிட் செய்து உள்ளனர்.

மேலும் படிக்க : பிரதமர் மோடியின் ஃபோட்டோஷாப் புகைப்படத்தை பதிவிட்ட பீட்டர் அல்போன்ஸ் !

இதற்கு முன்பாகவும், பிரதமர் மோடியை புகைப்பட கலைஞர் ஒருவர் தரையில் படுத்துக் கொண்டு புகைப்படம் எடுத்ததாக எடிட் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்று இந்திய அளவில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

முடிவு : 

நம் தேடலில், புகைப்பட கலைஞர் ஒருவர் தரையில் படுத்த நிலையில் பிரதமர் மோடியை புகைப்படம் எடுப்பதாக பரவும் படம் எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader