உருமாறிய கொரோனா செய்திக்கு மோடி ஆர்.எஸ்.எஸ் உடையில் இருக்கும் படத்தை சன் நியூஸ் வெளியிட்டதா ?

பரவிய செய்தி

சன் நியூஸ்ல ஒரு முரட்டு மீம் கிரியேட்டரை வேலைக்கி எடுத்துருக்காய்ங்க. அவன் ஒவ்வொரு செய்தியையும் மீமா தான் பாக்கறான்

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

சன் நியூஸ் நிறுவனத்தின் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் வெளியிடப்படும் நியூஸ் கார்டுகளில் இடம்பெறக்கூடிய புகைப்படங்கள் கிண்டல் செய்யும் விதத்திலும், மீம் வடிவிலும் இருப்பதாக அதிக அளவில் பகிர்வதையும், கமெண்ட் செய்வதையும் பார்த்து இருக்கிறோம்.

Advertisement

இந்நிலையில், ” உருமாற்றம் அடைந்த வைரஸ்கள் ஆபத்தானவை ” உருமாற்றம் அடைந்த வைரஸ்களின் அபாயம் அதிகமாக இருக்கும். கொரோனா 3-வது அலையை விரைவாக தடுக்க வேண்டும் !. 6 மாநில முதலமைச்சர்களுடனான கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு ” எனும் செய்திக்கு சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டில் பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ் உடையில் இருக்கும் புகைப்படத்தையும், தற்போதுள்ள புகைப்படத்தையும் இணைத்து வெளியிட்டு உள்ளதாக ஓர் நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Twitter link | Archive link 

Advertisement

உண்மை என்ன ?

2021 ஜூலை 16-ம் தேதி சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டு குறித்து அதன் முகநூல் பக்கத்தில் தேடுகையில், பிரதமர் மோடியின் தற்போதைய புகைப்படத்தை வைத்து வெளியிட்ட நியூஸ் கார்டே இடம்பெற்று இருக்கிறது.

Facebook link | Archive link 

வைரல் செய்யப்படும் சன் நியூஸ் கார்டை பார்க்கையில், அது எடிட் செய்யப்பட்ட ஒன்றாக தெரிகிறது. பிரதமர் மோடியின் புகைப்படம் இருக்கும் பகுதியில் எடிட் செய்யப்பட்டது தெரிவதை காணலாம்.

மேலும் படிக்க : போலி செய்தி பற்றி பேசிய அண்ணாமலை… அதை நியூஸ் 7 கார்டில் எடிட் செய்து பரப்பும் ஆதரவாளர்கள் !

முன்னணி செய்தி நிறுவனங்களின் நியூஸ் கார்டுகளில் போலியான செய்திகளை அல்லது கட்சி தலைவர்கள் பேசியதை எடிட் செய்து பரப்புவதை நாம் தொடர்ந்து பதிவிட்டு வருகிறோம்.

மேலும் படிக்க : ஒளிப்பதிவு திருத்தச் சட்டத்திற்கு இயக்குனர் தங்கர் பச்சான் ஆதரவு தெரிவித்தாரா ?

முடிவு :

நம் தேடலில், சன் நியூஸ் நிறுவனம் உருமாற்றம் அடைந்த வைரஸ்கள் ஆபத்தானவை என வெளியிட்ட செய்தியில் பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ் உடையில் இருக்கும் புகைப்படத்தையும், தற்போதுள்ள புகைப்படத்தையும் ஒப்பிட்டு வெளியிட்டதாக பரப்பப்படும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button