This article is from Aug 27, 2020

நேற்று மயில், இன்று வாத்துடன் மோடி இருப்பதாக வைரலாகும் பழைய புகைப்படம் !

பரவிய செய்தி

நேற்று மயில்.. இன்று வாத்து… ஒரு பக்கம் mac.. ஒரு பக்கம். நாளிதழ்..2 புத்தகம் வேற கவுந்து கிடக்குது அந்த காபி வேற ஆறுது…. ஒரு மனிதன் எவ்வளவு வேலை செய்வார்..

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

இந்தியப் பிரதமர் மோடி சமீபத்தில் தன்னுடைய லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் மயில்களுக்கு உணவு அளிக்கும் புகைப்படம், வீடியோ வெளியிட்டார். இப்படி வெளியான வீடியோ, புகைப்படங்கள் இந்திய ஊடகங்களில் பேசு பொருளாக மாறியது. அதேபோல், கொரோனா நோய்த்தொற்றின் போது பிரதமரின் ஃபோட்டோஷூட் என சமூக வலைதளங்களில் விமர்சங்களையும் பெற்றது.

இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று மயிலுடன் இருந்தார், இன்று வாத்துடன் இருக்கிறார், நாளை என்னவாக இருக்கும் என இரு புகைப்படங்கள் இந்திய அளவில் சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது. மரத்தின் அருகே புல் தரையில் அமர்ந்து மோடி செய்தித்தாள் படிக்க அருகே இரண்டு புத்தகங்கள், கணினி மற்றும் வாத்துகள் சூழ்ந்து இருக்கிறது. இப்புகைப்படமும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Facebook link | archive link

உண்மை என்ன ?  

பிரதமர் மோடி கொரோனா பாதிப்பு உண்டான பிறகு வெளியிட்ட வீடியோக்களில் தாடி மற்றும் மீசையுமாக இருந்தார். சமீபத்தில் வெளியிட்ட மயில் வீடியோவில் கூட நீண்ட தாடியைக் கொண்டிருந்தார். ஆனால், வாத்துகள் சூழ்ந்து இருக்கும் புகைப்படத்தில் தோற்றம் வேறாக இருக்கிறது. ஆகவே, இது பழைய புகைப்படமாக இருக்கும் எனத் தோன்றியது.

Twitter link | archive link 

வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஜ் இமேர்ஜ் சேர்ச் செய்கையில், வைரலாகும் அதே புகைப்படம் கிடைக்கவில்லை. மாறாக, அதே இடத்தில் மற்றொரு கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் 2013-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி rediff.com தளத்தில் வெளியான மோடி குறித்த கட்டுரையில் இடம்பெற்று உள்ளது.

எனினும், இதற்கு முன்பாக 2012 ஜனவரி 8-ம் தேதியே blog.mdnalapat.com எனும் தளத்தில் மோடி மரத்தின் அருகே அமர்ந்து ஒபாமா புத்தகத்தை படிக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. புகைப்படங்கள் வேறாக இருந்தாலும், எடுக்கப்பட்ட தருணம் ஒன்றாக உள்ளது. வைரலாகும் புகைப்படத்தில் அதே ஒபாமா புத்தகம் இருப்பதை காணலாம்.

முடிவு :

நம் தேடலில், நேற்று மயில், இன்று வாத்து உடன் பிரதமர் மோடி இருப்பதாக வைரலாகும் புகைப்படம் 2012-ல் குஜராத்தின் முதல்வராக இருந்த போது எடுக்கப்பட்டது என்றும், சமீபத்தில் எடுக்கப்பட்டது அல்ல என்பதையும் அறிய முடிந்தது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader