அயோத்தி ராமர் கோவிலில் தினமும் வழிபட வரும் குரங்கு எனப் பரவும் தவறான செய்தி !

பரவிய செய்தி
அயோத்தியில், தினமும் இரவில் யாரும் இல்லாத நேரத்தில் குரங்கு வந்து ராமர் கோவிலில் வழிபாடு செய்து வந்தது. ஒரு நாள் இரவு, அந்த கோவிலின் அர்ச்சகர் ஒருவர், இந்த சம்பவத்தை கண்டு ஆச்சரியமடைந்தார். மறுநாள், குரங்கு மீண்டும் வந்தது. அதே சமயம், இந்தக் குரங்கின் ராம பக்தியைக் கண்டு வியந்தான். இது மொபைலில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில், மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் கடவுள் பக்தி இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்.
மதிப்பீடு
விளக்கம்
அயோத்தி ராமர் கோவிலுக்கு தினமும் ஒரு குரங்கு வழிபட வருவதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. மேலும் அந்த வீடியோவில் குரங்கு இரவில் யாரும் இல்லாத நேரத்தில் ஒரு கோவிலுக்குள் வருவதையும், அதைக்கண்டு நாய் குறைப்பதையும் காண முடிந்தது.
*உடம்பை சிலிக்க வைக்கும்* *காட்சி…..* அயோத்தியில், தினமும் இரவில் யாரும் இல்லாத நேரத்தில் குரங்கு வந்து ராமர் கோவிலில் வழிபாடு செய்து வந்தது.ஒரு நாள் இரவு, அந்த கோவிலின் அர்ச்சகர் ஒருவர், இந்த சம்பவத்தை கண்டு ஆச்சரியமடைந்தார்.மறுநாள், குரங்கு மீண்டும் வந்தது. அதே சமயம், pic.twitter.com/pQmng9h2nj
— RAMANATHAN KRISHNAN (@ramandialnet) August 29, 2023
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், அந்த குரங்கு வழிபடும் கோவில், அயோத்தி அல்ல என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
இதுகுறித்து Navbharat Times தன்னுடைய யூடியூப் பக்கத்தில் 2022 டிசம்பர் 31 அன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவின் மூலம், இது லக்னோவில் உள்ள ‘பாபா புத்தேஷ்வர் தர்பார்‘ கோவில்(சிவன் கோவில்) என்பதை அறிய முடிந்தது.
அதில் “கடந்த 2 மாதங்களாக குரங்கு ஒன்று கோவிலுக்கு தவறாமல் வருகிறது. முதலில் கடவுள் சிலையின் முன் படுத்து வணங்கும். அதன் பிறகு அங்கு வைக்கப்பட்டிருந்த பிரசாதத்தை எடுத்துக் கொண்டு அமைதியாகச் செல்லும்” என்று கோவிலில் வேலை செய்யும் அர்ச்சகர்கள் அந்த வீடியோவில் கூறுவதைக் காணமுடிகிறது.
இதே போன்று Buddheshwar Mahadev Mandir Lucknow என்ற யூடியூப் பக்கத்திலும் சமூக ஊடகங்களில் பரவி வரும் அதே வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதைக் காண முடிந்தது. கடந்த 2022 டிசம்பர் 23 அன்று பதிவேற்றப்பட்டுள்ள அந்த வீடியோ, “‘#பஜ்ரங்பாலி #ஹனுமான்ஜி #லக்னோவில் #புத்தேஷ்வர் மகாதேவ் கோயிலுக்கு #வருகிறார்” என்ற தலைப்புடன் காணப்படுகிறது.
மேலும் படிக்க: அயோத்தி ராமர் கோவிலில் குரங்கு தினமும் மணி அடிக்கும் வீடியோவா ?
இதற்கு முன்பும், அயோத்தி ராமர் கோவிலில் தினமும் குரங்கு மணி அடிப்பதாக செய்திகள் பரவின. அதனையும் ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டிருக்கிறோம்.
முடிவு:
நம் தேடலில், அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு தினமும் இரவில் குரங்கு வழிபட வருவதாகப் பரவும் வீடியோ அயோத்தியில் எடுக்கப்பட்டது அல்ல என்பதையும், இது லக்னோவில் உள்ள ‘பாபா புத்தேஷ்வர் தர்பார்’ என்ற கோவிலில் எடுக்கப்பட்ட வீடியோ என்பதையும் அறிய முடிகிறது.