5,000 ஆண்டுகள் பழமையான குடைவரைக் கோயில் எனப் பரவும் கழுகுமலை வெட்டுவான் கோயில் புகைப்படம் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
ஒரே பாறையில் செதுக்கப்பட்ட 5000 ஆண்டுகள் பழமையான கோயில் இந்தியாவில் உள்ளது எனப் இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் கடந்த 2021ம் ஆண்டு முதல் பரப்பப்பட்டு வருகிறது.
Found in India, 5000 years old, made from a single rock… pic.twitter.com/Q4NNwp7D1B
— S.RAMESH AGARWALA (@_GUDDU1) October 10, 2022
Found in India, 5000 years old, made from
a single rock💫 pic.twitter.com/fy6GtDv4xI— Sean (@CameraMan41981) August 6, 2022
உண்மை என்ன ?
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் கோயில் புகைப்படம் குறித்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து தேடினோம். அப்புகைப்படத்தில் இருப்பது தூத்துக்குடிக்கு அருகே கழுகுமலையில் அமைந்துள்ள வெட்டுவான் கோயில் என அறிய முடிந்தது.
இந்த கோயில் குறித்து ‘ Southern connection ‘ என்ற தலைப்பில் Front Line கட்டுரை வெளியிட்டு உள்ளது. அதில் கி.பி 800ல் பாண்டிய மன்னன் நெடுஞ்சடையான் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இக்கோயில் குறித்து ‘ தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ‘ கட்டுரையில் கி.பி 760-800 காலக்கட்டத்தில் கட்டப்பட்டதாகவும், திராவிட கட்டுமான பாணியில் இதன் விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கழுகுமலை வெட்டுவான் கோவில் குறித்து தமிழ்நாடு தொல்லியல் துறை அதன் இணையதளத்தில் பதிவிட்டு உள்ளது. அதில், கி.பி 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கோயில் எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோயில் போல உள்ளதால் ‘ தமிழ்நாட்டில் எல்லோரா ‘ என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
பழமையான கோவில்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள், பொருட்கள் உள்ளிட்டவை மக்கள் மத்தியில் ஆச்சரியங்களை ஏற்படுத்தி வருவதாலும், மதம் சார்ந்த முன்னெடுப்பிற்காக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோவில், சிலைகள் என பல வதந்திகள் சமூக வலைதளங்களில் 5000 years old, made from a single rockபரப்பப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க : ஜம்மு காஷ்மீரில் 12,000 வருடப் பழமையான விஷ்ணு சிலை கிடைத்ததாகப் பரப்பப்படும் பொய் !
மேலும் படிக்க : சென்னை அருகே அகழாய்வில் 12,000 ஆண்டுகள் பழமையான விஷ்ணு சிலை கிடைத்ததாகப் பரப்பப்படும் வதந்தி
இதற்கு முன்பாக, தமிழ்நாட்டில் மற்றும் ஜம்மு காஷ்மீரில் கிடைத்த பழமையான சிலைகளை 12,000 ஆண்டுகள் பழமையான சிலைகள் என இங்கு வதந்திகள் பரப்பப்பட்டன.
முடிவு :
நம் தேடலில், இந்தியாவில் உள்ள 5000 ஆண்டுகள் பழமையான கோவில் எனப் பரப்பப்படும் புகைப்படம் கி.பி 8ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் நெடுஞ்சடையான் காலத்தில் கட்டப்பட்ட கழுகுமலை வெட்டுவான் கோயில் என்பதை அறிய முடிகிறது.