This article is from Oct 14, 2020

ஆண்டு கட்டணம் ரூ.82 லட்சம் பெறும் உலகின் விலையுயர்ந்த பள்ளியும், அதன் மீதான குற்றச்சாட்டும் !

பரவிய செய்தி

சுவிட்சர்லாந்தில் இருக்கும் லு ரோஸி உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த பள்ளி. ஆண்டு கல்விக் கட்டணம் $113,178 (82,98,827.78ரூ)

மதிப்பீடு

விளக்கம்

உலகின் மிக விலையுயர்ந்த பள்ளி எனத் தேடினால் கிடைக்கும் தகவல் லு ரோஸி என்பதாகும். சுவிட்சர்லாந்து நாட்டில் அமைந்து இருக்கும் Le Rosey எனும் பள்ளி தொடர்ந்து உலகின் மிக விலையுயர்ந்த பள்ளி எனும் பெயரை தக்க வைத்து வருகிறது.

1880-ம் ஆண்டில் பால் கார்னல் என்பவரால் நிறுவப்பட்ட லு ரோஸி சுவிட்சர்லாந்து நாட்டின் முன்னணி சர்வதேச போர்டிங் பள்ளியாகும். இது அந்த நாட்டின் மிகப் பழமையான மற்றும் உலகின் மிக விலையுயர்ந்த பள்ளிகளில் ஒன்றாகும்.

ஜெனீவாவிற்கும், லெசானுக்கும் இடையில் சுவிட்சர்லாந்தின் ரோலில் உள்ள சேட்டோ டு ரோஸியில் பள்ளியின் பிரதான வளாகம் அமைந்து இருக்கிறது. இப்பள்ளியில் குளிர்காலத்திற்கும், ஆண்டின் மீதமுள்ள காலத்திற்கும் என இரண்டு வளாகங்கள் உள்ளன. 8 வயது முதல் 18 வரையிலான மாணவர்கள் பிரென்ச், ஆங்கிலம் மட்டுமின்றி சர்வதேச மொழியிலும் பயில முடியும்.

லு ரோஸி ஆண்டு கல்விக் கட்டணமாக மட்டும் 113,178 டாலர்கள்(இந்திய மதிப்பில் ரூ.82 லட்சம்) பெறுவதாக 2019-ல் thoughtco எனும் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 1,00,000 பவுண்ட் கட்டணம் பெறும் உலகின் மிக விலையுயர்ந்த பள்ளியில் உடன் படிக்கும் மாணவர்களால் தங்கள் மகள் கொடுமைப்படுத்தப்பட்டதாக அப்பள்ளியின் மீது இந்திய தொழிலதிபர் பெற்றோர் வழக்கு தொடுத்ததும் நிகழ்ந்து இருக்கிறது.

2020 மே மாதம் வெளியான டெய்லி மெயில் செய்தியில், ” வகுப்பு மாணவர்களால் கொடுமைப்படுத்தப்பட்டதாக் கூறப்படும் ஒரு மாணவியின் கோடீஸ்வர பெற்றோர் உலகின் மிக விலையுயர்ந்த உறைவிடப் பள்ளி மீது வழக்கு தொடுத்து உள்ளனர். ஆண்டிற்கு 100,000 பவுண்ட் வசூலிக்கும் சுவிஸ் பள்ளி தன் மகளை பாதுகாக்க தவறிவிட்டதாக இந்திய தொழிலதிபர் பங்கஜ் ஓஸ்வால் கூறி உள்ளார். ஆனால், பள்ளி நிர்வாகம் இக்குற்றச்சாட்டை மறுத்து உள்ளதாக ” வெளியாகி இருக்கிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader