ஏழைகளுக்கு உதவி செய்யும் அம்மா, மகள் என வைரலாகும் சீரியல் நடிகைகள் புகைப்படம்!

பரவிய செய்தி
கஷ்டப்படும் ஏழைக் குழந்தைகளுக்கு தன் சம்பளத்தில் பாதியை கொடுத்து உதவி செய்யும் அம்மா மகள் இவர்களை வாழத்தலாமே.
மதிப்பீடு
விளக்கம்
போலீஸ் உடையில் இருக்கும் இருவரும் அம்மா,மகள் என்றும், இருவரும் தங்களின் ஊதியத்தில் இருந்து மாதம் மாதம் ஓர் தொகையை ஏழை குழந்தைகளுக்கு உதவி செய்ய வழங்கி வருவதாக இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2019-ம் ஆண்டு மே மாதம் ஐஸ்வர்யா எனும் முகநூல் பக்கத்தில் வெளியாகி 27 ஆயிரத்திற்கும் மேல் ஷேர் செய்யப்பட்ட பதிவே தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
புகைப்படத்தில் போலீஸ் உடையில் இருப்பவர்கள் சீரியல் நடிகைகள், உண்மையான அம்மா மகள் அல்ல. இடதுபக்கத்தில் இருப்பவர் ” பரஸ்பரம் ” எனும் மலையாள தொலைக்காட்சி சீரியலில் தீப்தி ஐபிஎஸ் கதாபாத்திரத்தில் நடித்தவர். அவரின் பெயர் காயத்திரி அருண்.
மேலும் படிக்க : சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்தவனின் ஆணுறுப்பை சுட்ட போலீஸ் | செய்தி உண்மையா ?
கடந்த ஆண்டிலும், சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்தவனின் ஆணுறுப்பை சுட்ட போலீஸ் என சீரியல் நடிகை காயத்திரி அருண் போலீஸ் உடையில் இருக்கும் புகைப்படத்தை தவறாக வைரல் செய்தனர்.
முடிவு :
நம் தேடலில், அம்மா மகள் இருவரும் சேர்ந்து ஏழை குழந்தைகளுக்கு மாதம் மாதம் சிறிய தொகை பணத்தை வழங்க வருகின்றார்கள் என பரவும் புகைப்படத்தில் இருப்பவர்கள் மலையாள சீரியல் நடிகைகள் என்பதையும், சீரியல் நடிகைகளின் புகைப்படத்தை பயன்படுத்தி தொடர்ந்து போலிச் செய்திகளைப் பரப்பி வருகிறார்கள் என்பதையும் அறிய முடிகிறது.