இங்கிலாந்து ராணியுடன் ஆ.ராசா.. மெழுகு சிலை எனத் தெரியாமல் பகிரும் பாஜக, திமுகவினர் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
தமிழக பாஜகவின் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், ” அடப்பாவிங்களா இங்கிலாந்து ராணிட்ட நெருங்குற அளவுக்கு என்னய்ய Business.? 2G லாபம் அரச குடும்ப நெருக்கம் அளவுக்கு ஜாஸ்தியோ ? கோபாலபுரம் விரட்டி அடித்தாலும் விக்டோரியா புரம் வரவேற்கிறதே! மச்சம் டா ” என திமுக எம்.பி ஆ.ராசா லண்டனில் இங்கிலாந்து அரச குடும்பத்துடன் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு விமர்சித்து இருந்தார்.
அதேபோல், ” தொட்டா தீட்டுனு சொன்ன நீ தொடவே முடியாத இடத்துல இருக்கேன் ஓய்! நேற்று இல்லை நாளை இல்லை அண்ணன் எப்பவுமே ராஜா! ” என ட்விட்டரில் ஆஷிக்ரவூப் என்பவர் பதிவிட்டதை ஆர்.கே.நகர் திமுக எம்.எல்.ஏ எபனேசர் பகிர்ந்து இருந்தார்.
உண்மை என்ன ?
உலகப் புகழ்பெற்ற லண்டன் அருங்காட்சியமான மேடம் டுசாட்சில் வைக்கப்பட்டுள்ள இங்கிலாந்து அரச குடும்பத்தின் மெழுகு சிலைகள் உடனே திமுக எம்.பி ஆ.ராசா புகைப்படம் எடுத்து இருக்கிறார்.
We’ve got to respect their wishes 🤷♂️ #Megxit pic.twitter.com/mb936VcqRd
— Madame Tussauds London (@MadameTussauds) January 9, 2020
2020-ல் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தின் ட்விட்டர் பக்கத்திலும், 2018-ல் இன்சைடர் செய்திக் கட்டுரையிலும் அதே சிலைகள் இடம்பெற்று உள்ளதை காணலாம்.
முடிவு :
நம் தேடலில், திமுக எம்.பி ஆ.ராசா இங்கிலாந்து அரச குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக பரப்பப்படும் புகைப்படத்தில் இருப்பது இங்கிலாந்து அரச குடும்பத்தின் மெழுகு சிலைகளே என அறிய முடிகிறது.