ம.பியில் பாஜக இளைஞரணி தலைவர் பசுவை பாலியல் பலாத்காரம் செய்ததாக பரவும் வதந்தி !

பரவிய செய்தி

பசுமாட்டை பதம் பார்த்த மத்திய பிரதேச பாஜக இளைஞரணி தலைவர்.பசுவின் கதறலை கேட்டு ஊர் மக்கள் விரட்டி பிடித்து போலிஸில் ஒப்படைப்பு.

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

மத்தியப்பிரதேச மாநிலத்தில் பாஜக இளைஞரணி தலைவர் பசு மாட்டை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக என்று திமுக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் இப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை என்ன?

இப்புகைப்படத்தைச் சற்று உற்று கவனித்துப் பார்த்தால், இப்புகைப்படத்தில் உள்ள நபர்கள் இந்தியர்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ள முடியும். அத்துடன் புகைப்படத்தில் கீழே வலது பக்கத்தில் குறிப்பிட்ட வலைதளமான www.Kampucheathyme.com என்பது கம்மோடியா நாட்டில் உள்ள ஒரு தினசரி செய்தித்தாளின் பெயராகும்.

பின்னர், மத்தியப் பிரதேச பாஜக இளைஞரணித் தலைவர் என்று உள்ளதே தவிர, அந்த தலைவரின் பெயர், உள்ளிட்ட எவ்விதமான தகவலும் கொடுக்கவில்லை.

சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தில் பசுவை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நிகழ்ந்ததா எனத் தேடுகையில, ” மத்தியப்பிரதேசம் குவாலியர் பகுதியில் பசுவை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிசிடிவி காட்சி வைரல் ஆனதால் அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருவதாக ” டைம்ஸ் நவ் செய்தியில் வெளியாகி இருக்கிறது. மேலும், ம.பியில் பாஜக இளைஞரணி தலைவர் பசுவை பாலியல் பலாத்காரம் செய்ததாக எந்த செய்தியும் வெளியாகவில்லை.

முடிவு : 

நம் தேடலில், மத்தியப் பிரதேச உள்ள பாஜக இளைஞரணி தலைவர் பசுவை பாலியல் பலாத்காரம் செய்ததாக பரப்பப்படும் தகவல் தவறானது. அது கம்போடியா நாட்டின் செய்தியில் வெளியான புகைப்படம் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader