ம.பியில் இந்துக்கள் மீது கல்லெறிந்த முஸ்லீம் பெண்கள் கைது எனப் பரவும் பழைய வீடியோ !

பரவிய செய்தி
ராம நவமி நிகழ்ச்சியில் ஹிந்துக்கள் மீது கல் எறிந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர். இடம் : மத்திய பிரதேசம், கார்கோன்…
மதிப்பீடு
விளக்கம்
மத்தியப் பிரதேச மாநிலத்தின் கார்கோன் பகுதியில் ராமநவமி நிகழ்ச்சியில் கல் எறிந்த முஸ்லீம் பெண்கள் கைது செய்யப்படுவதாக, போலீஸ் வாகனத்தில் பெண்கள் ஏற்றப்படும் 21 நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
MP के #खरगौन मे #हिन्दुओं पर #पत्थर और #पेट्रोल बम चलाने वाली #सलमा,#रुकसाना को जेल भेजती #पुलिस
😁
बाबुल की दुवाये लेती जा…………😍 pic.twitter.com/5WKrFnNQHh— vivek kumar (@vivekku07503467) April 15, 2022
உண்மை என்ன ?
வீடியோவின் கீஃப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2020 ஏப்ரல் மாதம் கொரோனா பொதுமுடக்கம் தருணத்தின் போது உத்தரப்பிரதேசம் மாநிலம் மொரதாபாத் பகுதியில் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை தாக்கியவர்களை போலீசார் கைது செய்த வீடியோ என அறிய முடிந்தது.
2020 ஏப்ரல் 14-ம் தேதி ஆம்புலன்ஸ் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை தாக்கிய 25 பேரை போலீசார் கைது செய்ததாக வெளியான மற்றொரு வீடியோவையும் காணலாம்.
மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மற்றும் சென்வா உள்ளிட்ட பகுதிகளில் ராமநவமி கொண்டாட்டத்தின் போது உருவான மத மோதல் தொடர்பாக 121 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் சேத மீட்பு சட்டம் 2021-ன் கீழ் மாவட்ட நிர்வாகம் 50-க்கும் மேற்பட்டவர்களின் வீடுகள் மற்றும் கடைகளை இடித்து தள்ளியது.
முடிவு :
நம் தேடலில், மத்தியப் பிரதேசம் கார்கோன் பகுதியில் ராம நவமி நிகழ்ச்சியில் இந்துக்கள் மீது கல் எறிந்த முஸ்லீம் பெண்கள் கைது செய்யப்படுவதாக பரவும் வீடியோ தவறானது, அது 2020-ல் உத்தரப்பிரதேசத்தில் எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.