பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்தவர் பாஜக உறுப்பினர் அல்ல என குஷ்பு சொன்ன பொய் !

பரவிய செய்தி
மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த மனநலம் குன்றியவர் மீது ஒருவர் சிறுநீர் கழித்த காட்சி மிகவும் பயங்கரமான மற்றும் கவலைக்குரிய சம்பவம். இவை ஆணவம், உணர்வின்மை மற்றும் கொடூரமான குற்றம். அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். ஆனால், அது போதாது, அவருக்கு பாடம் கற்பிக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் கூறுவது போல் அவர் பாஜக உறுப்பினர் அல்ல. மேலும், இதுபோன்ற குற்றங்கள் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.
மதிப்பீடு
விளக்கம்
மத்தியப் பிரதேச மாநிலத்தின் சித்தி மாவட்டத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர் மீது பிரவேஷ் சுக்லா என்பவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மனிதத்தன்மையற்ற இச்செயலை செய்த பிரவேஷ் சுக்லா சித்தி தொகுதி பாஜக எம்எல்ஏ கேதார்நாத் சுக்லாவின் முன்னாள் பிரதிநிதி எனக் கூறி பல்வேறு கண்டனங்கள் எழுந்தன.
சமூக வலைதளம் மற்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் கண்டனங்கள் எழுந்த உடன், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க மத்தியப்பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் செளகான் உத்தரவு பிறப்பித்ததாக ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
अपराधी केवल अपराधी होता है, उसकी कोई जाति, धर्म या पार्टी नहीं होती।
सीधी मामले को लेकर मैंने निर्देश दिए हैं, आरोपी को ऐसी सजा दी जाएगी जो उदाहरण बने। हम उसे किसी भी कीमत पर नहीं छोड़ेंगे। pic.twitter.com/gmNk7PxfZD
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) July 4, 2023
மேலும், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், குற்றவாளி என்பவர் குற்றவாளி மட்டுமே. அவருக்கு சாதியோ, மதமோ, கட்சியோ கிடையாது. குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்து உள்ளதாக தெரிவித்து இருந்தார்.
#WATCH | Sidhi viral video: Madhya Pradesh police takes accused Pravesh Shukla into custody. Earlier a case was registered against him under sections 294,504 IPC and SC/ST Act. #MadhyaPradesh pic.twitter.com/DY3hJCR64O
— ANI (@ANI) July 4, 2023
இதையடுத்து, பிரவேஷ் சுக்லா மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் பிரவேஷ் சுக்லா கைது செய்யப்பட்டு உள்ளார்.
सोशल मीडिया में एक वीडियो वायरल हो रहा है जिसमें एक व्यक्ति को मेरा प्रतिनिधि बताया जा रहा है वह व्यक्ति न ही भाजपा का कोई पदाधिकारी है और न ही मेरा विधायक प्रतिनिधि है एवम् आरोपी के विरुद्ध भा. द. वि. एवं एसटी/एससी एक्ट के तहत मामला पंजीबद्ध किया।@ChouhanShivraj @narendramodi pic.twitter.com/wkVvHtZuTq
— Kedar Nath Shukla (@KedarShuklaBJP) July 4, 2023
சித்தி தொகுதி பாஜக எம்எல்ஏ கேதார்நாத் சுக்லா அளித்த பேட்டியில், ” அந்த நபர் என்னுடைய பிரதிநிதி அல்ல, பாஜக அலுவலக பொறுப்பாளரும் அல்ல. குற்றச்சாட்டப்பட்ட நபருக்கு எதிராக பாஜக உள்ளது என்றும், எஸ்.டி/எஸ்.டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது ” என்றும் தெரிவித்து உள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
In a very disturbing and appalling incident, a man is seen urinating on a mentally unstable man from a tribe in MP. These are the heights of arrogance, insensitivity & an act of absolute heinous crime. He is arrested, but that will not suffice. He needs to be taught a lesson for…
— KhushbuSundar (@khushsundar) July 5, 2023
— PRAVESH SHUKLA (@PRAVESH4277) July 7, 2019
ஆனால், பிரவேஷ் சுக்லாவின் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் அவரின் பாஜக கட்சி உறுப்பினர் அட்டை பதிவிடப்பட்டு இருக்கிறது. மேலும், அம்மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூட்டத்தில் கலந்து கொண்ட புகைப்படம், சித்தி தொகுதி எம்எல்ஏ கேதார்நாத் சுக்லா அருகே இருக்கும் புகைப்படம் மற்றும் பாஜக கூட்டங்களில் கலந்து கொண்ட பல்வேறு புகைப்படங்கள் கிடைத்தன. இதன் மூலம் பிரவேஷ் சுக்லா பாஜகவைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.
While the #BJP and local MLA Kedarnath Kashyap kept denying that the accused is a BJP worker his own father accepted that he is a BJP MLA representative… @TheQuint @QuintHindi pic.twitter.com/REkIL2lOnH
— Vishnukant (@vishnukant_7) July 4, 2023