MS பெயிண்ட்- ஐ விண்டோஸ்யில் இருந்து நீக்கப்போவதில்லை.

பரவிய செய்தி
MS பெயிண்ட் app ஐ விண்டோஸ்யில் இருந்து நிரந்தரமாக நீக்கப்போவதில்லை என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது .
மதிப்பீடு
சுருக்கம்
விண்டோஸ் ஸ்டோரில் MS பெயிண்ட் app ஐ பதிவிறக்கம் செய்யலாம் .
விளக்கம்
MS பெயிண்ட் app ஐ மைக்ரோசாப்ட் நிறுவனம் 1985 இல் விண்டோஸ் 1.0 வில் அறிமுகம் செய்தார்கள் . இன்றோடு MS பெயிண்ட் app ஐ உருவாக்கி 32 ஆண்டுகள் ஆகிவிட்டது . இதன் பயன்பாடு என்பது புதிதாக குழந்தைகளுக்கு கணினி பற்றி விவரிக்கும் ஆரம்ப தருணத்தில் இது போன்ற செயலியால் ஆர்வத்தை தூண்ட முடியும் .
எனவே இந்த செயலி அதிகமாக வரவேற்பை பெற்றது . அன்றைய காலகட்டத்திற்கு இது போன்ற செயலிகள் ஏற்றதாக இருக்கலாம் ஆனால் இப்பொழுது பல அதிநவீன தொழில் நூட்பத்தில் பல செயலிகள் வந்து உபயோகத்தில் உள்ளது .
பெயிண்ட் செயலியில் உள்ளவை அனைத்தும் போட்டோஷாப் இல் அடங்கிவிடும் , போட்டோஷாப் நன்கு வளர்ச்சி அடைந்த செயலி . பெயிண்ட் செயலியில் குழந்தைகளுக்கு வரைந்து விளையாடவே அதிகம் பயன்படுத்த படுகின்றது . இறுதியாக வெளியிட்ட விண்டோஸ் 10 வது பதிப்பு வரை பெயிண்ட் செயலி இருந்து வருகின்றது . ஆனால் புதிய பதிப்பில் உள்ள அம்சங்களில் நீக்கப்படலாம் என்கிறார்கள் மைக்ரோசாப்ட் நிறுவனம் .
ஆனால் பெயிண்ட் செயலிக்கு இருக்கும் ரசிகர்களை மனதில் கொண்டு MS பெயிண்ட் app ஐ விண்டோஸ் ஸ்டோர் இல் இலவசமாக பதிவிறக்கி கொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர் . இதில் இருந்து பெயிண்ட் செயலில் முழுவதுமாக நீக்கப்பட போவதில்லை என்று அறியலாம் .
மேலும் புதிய பொலிவுடன் 3D தொழில்நுட்பத்தில் உருவாக்க உள்ளனர் . இதில் 2D யும் அடங்கும் என்றுள்ளார்கள் . MS பெயிண்ட் ரசிகர்களுக்காக இச்செய்தி மிகப்பெரிய மகிழ்ச்சியை தரும் .