பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு தொழில்கள் சரிந்தது: RBI அறிக்கை.

பரவிய செய்தி
2016 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் சரிந்தது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் ஏற்றுமதி பங்களிப்பானது மிக முக்கியமானவை. இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 40% பங்கை சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வகிக்கின்றன.
அத்தகைய தொழில் நிறுவனங்களின் ஏற்றுமதி, வளர்ச்சி, தினசரி வேலைகள் என அனைத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியது பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. தொழில் நிறுவனங்களின் இழப்பு பற்றி சமீபத்தில் RBI வெளியிட்ட அறிக்கை இதை மெய்பித்துள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் MSME நிறுவனங்கள் பெற்ற வங்கி கடனில் பாதிப்புகள் உருவாகின. பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் இருந்து சிறு தொழில்களின் முன்னேற்றம் குறைந்து, அவற்றின் கடனில் தாக்கத்தை அதிகரித்து, இறுதியாக சரிவை காண வைத்துள்ளது. அதேபோல். ஜி.எஸ்.டி செயலாக்கம் நிறுவனங்களின் கடனில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரியவில்லை, அது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் ஏற்றுமதியில் வேகமாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
“ சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்(MSME) நிறுவனங்களின் ஏற்றுமதியில் அதிகளவில் மோசமான பாதிப்பானது பணமதிப்பிழப்பு தொடர்ந்து வந்த ஜி.எஸ்.டி தொடர்பான பிரச்சனைகளால் சந்தித்துள்ளது. வெளிப்படையான ஜி.எஸ்.டி மற்றும் உள்ளீட்டு வரிக்கடன் பணம் சார்ந்த மூலதனத்தைப் பாதித்தது ஆகியவை பணத்தை திரும்பி கொடுப்பதில் தாமதப்படுத்தியது “ என RBI வெளியிட்ட மின்ட் ஸ்ட்ரீட் மெமோவில் கூறப்பட்டுள்ளது.
“ MSME ஏற்றுமதி 2016-ம் ஆண்டின் அக்டோபர் மாதத்திற்கு பின்பு பணமதிப்பிழப்பு காலத்தில் சிறிதளவு பலவீனமாகின, ஆனால் 2017 ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ( ஜி.எஸ்.டி நடைமுறை காலம்) கூர்மையாக வேகத்தில் தற்காலிக மீட்பானது மட்டுமே ஜி.எஸ்.டி நடைபெற்ற காலங்களில் செயல்படுத்தப்பட்டது “ என அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலில் 111 மில்லியன் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். GDP இல் உள்ள MSME 30 சதவீதம் பங்கைக் கொண்டுள்ளது. ஆனால், ஏற்றுமதி பாதிப்பை கண்டுள்ளது.
பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி வருகையால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையான பாதிப்பை அடைந்தன. அதனால், தமிழகத்தில் ஒரே ஆண்டில் 49, 329 நிறுவனங்கள் மூடப்பட்டு 5 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதைப்பற்றி படிக்க : தமிழகத்தில் ஒரே ஆண்டில் 50,000 தொழில் நிறுவனங்கள் மூடல்..!