This article is from Oct 10, 2018

மும்பை துறைமுகத்திற்கு ராஜேந்திர சோழனின் பெயர் சூட்டப்பட்டதா ?

பரவிய செய்தி

மும்பை துறைமுகத்திற்கு முதலாம் ராஜேந்திர சோழனின் பெயரை சூட்டியது மத்திய அரசு.

மதிப்பீடு

சுருக்கம்

மும்பை துறைமுகத்திற்கு ராஜேந்திர சோழனின் பெயர் சூட்டவில்லை, ஆனால் அவரின் திருவுருவப் படம் மகாராஷ்டிரா மாநில அரசால் Mazgon Docks என்ற இந்திய கப்பல் நிறுவனத்திற்கு அர்பணிக்கப்பட்டது.

விளக்கம்

தமிழகத்தில் இன்றுவரை பேருந்து நிலையம், புதிய கட்டிடங்கள், பாலங்கள் , சாலைகள் மற்றும் அரசு சார்ந்த பலவற்றிற்கு முன்னாள் மறைந்த அரசியல் தலைவர்களின் பெயர்கள் சூட்டி வருகின்றனர்.

இத்தகைய காலக்கட்டத்தில் மும்பை பெருநகரில் உள்ள துறைமுகத்திற்கு பேரரசர் முதலாம் ராஜேந்திர சோழனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்ற செய்திகள் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. அதில், அம்மாநில முதல்வர், ஆளுநர் பங்குபெற்ற அரசு நிகழ்ச்சி படம் இச்செய்திக்கு பக்கபலம்.

சோழப் பேரரசர்களில் கடல்கடந்து பல தேசங்களை வென்று தன் ஆளுகைக்குள் கொண்டு வந்த முதலாம் ராஜேந்திர சோழனின் பெருமை 1000 ஆண்டுகளை கடந்து நிலைத்து நிற்கிறது.

இத்தகைய பெருமைமிக்க பேரரசரை பெருமைப்படுத்த 2016 ஆம் ஆண்டு மும்பையின் ”  Mazgon Docks “எனும் கப்பல்கள் கட்டமைக்கும் நிறுவனத்திற்கு (அரசு நிறுவனம்) கம்பீரமான முதலாம் ராஜேந்திர சோழனின் உருவப்படம் அர்பணிக்கப்பட்டது.

” 2016 செப்டம்பர் மாதம் நடைபெற்ற Solemn நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ராஜேந்திர சோழனின் திருவுருவப் படத்தை வழங்க நிகழ்ச்சியின் தலைவர் தருண் விஜய் மற்றும் Mazgon Docks-ன் முன்னாள் தலைவர் ராகுல் குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர் “

“ ஆயிரம் ஆண்டுகள் ஆகினும் முதலாம் ராஜேந்திரனின் நினைவுகள் நீங்காமல் இருக்க காரணம் தேசிய ஒற்றுமை மட்டுமே அல்ல இந்திய பெருங்கடலை அமைதி பகுதியாக நிலைநிறுத்த முன்னுதாரணமாக இருந்தவர் “ என தருண் விஜய் உரையாற்றினர்.

மும்பை துறைமுகத்திற்கு ராஜேந்திர சோழனின் பெயர் சூட்டவில்லை, ஆனால் அவரின் திருவுருவப் படம் மகாராஷ்டிரா மாநில அரசால் Mazgon Docks என்ற இந்திய கப்பல் நிறுவனத்திற்கு அர்பணிக்கப்பட்டது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader