26/11 மும்பை தாக்குதலில் இறந்த தியாகி எனத் தவறாகப் பகிரப்படும் சினிமா காட்சி.

பரவிய செய்தி
மும்பை பயங்கரவாத தாக்குதலில் 23 புல்லட்கள் துளைத்த பிறகும் பயங்கரவாதி அஜ்மல் கசாப்பை உயிருடன் பிடித்தவர். அவரின் பெயர் துகாரம் ஓம்ப்லே ஜி.
மதிப்பீடு
விளக்கம்
2008-ம் ஆண்டு 26/11 மும்பை தாக்குதல் சம்பவத்தின் 11 ஆம் ஆண்டு நினைவு தினத்தை சமூக வலைதளங்களில் பலரும் நினைவு கூர்ந்து இருந்தனர். இதில், பயங்கரவாதி அஜ்மல் கசாப்பை பிடிக்கையில் AK47 துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட மும்பை போலீஸ் அதிகாரி துகாரம் ஓம்ப்லேவின் தியாகத்தை போற்றும் வகையில் அவரின் புகைப்படங்கள் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
Useful info & Entertainment என்ற முகநூல் பக்கத்தில் ” துகாரம் ஓம்ப்லே ” வின் தியாகத்தை போற்றும் வகையில் பதிவான மீம்ஸில் இடம்பெற்று இருக்கும் இரு புகைப்படங்கள் இந்தியா முழுவதிலும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு உள்ளது. மேலும், சில இணையதளங்களிலும், அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் கூட இப்படங்களை பதிவிட்டு உள்ளனர். சில பதிவுகளில் கடந்த ஆண்டில் இருந்தே இவ்விரு புகைப்படங்கள் இடம்பெற்று இருந்தன.
உண்மை என்ன ?
Assistant Sub-inspector Tukaram Omble, Ashok Chakra (posthumous). Confronted and grappled with Ajmal Kasab, captured him, but fell to his bullet.
ASI Omble and sixteen of his brave compatriots who died that fateful day saving Mumbai, would never be forgotten. Never. pic.twitter.com/Mfuq6GnpeX
Advertisement— Anand Ranganathan (@ARanganathan72) November 26, 2018
பயங்கரவாதி அஜ்மல் கசாப்பை பிடிப்பதில் உயிர் தியாகம் செய்த போலீஸ் அதிகாரி துகாரம் ஓம்ப்லே உடைய புகைப்படம் என பகிரப்படும் புகைப்படங்களில், வலதுபக்கத்தில் இருக்கும் புகைப்படம் மட்டுமே உண்மையான துகாரம் ஓம்ப்லே, இடப்பக்கத்தில் குண்டுகள் துளைக்கப்பட்டு இருப்பது திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சியாகும்.
2013-ம் ஆண்டு ” The attack of 26/11 ” என்ற தலைப்பில் மும்பை பயங்கரவாத தாக்குதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படத்தில் போலீஸ் அதிகாரி துகாரம் ஓம்ப்லே பயங்கரவாதி அஜ்மல் கசாப்பால் கொல்லப்படும் காட்சியில் இருந்து அப்படத்தை எடுத்து உள்ளனர். மேற்காணும் வீடியோவில் 3.38-வது நிமிடத்தில் அக்காட்சி இடம்பெற்று இருக்கும். இந்த படமே இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2018-ம் ஆண்டில் Catch news என்ற இணையதளத்தில் மும்பை தாக்குதல் குறித்து செய்தி வெளியிட்டு இருந்த போது துகாரம் ஓம்ப்லே என திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சியை தவறாக பதிவிட்டு உள்ளனர். அந்த புகைப்படத்தை தற்போது வரை நீக்கவில்லை. எனவே, தவறான புகைப்படத்தை பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .