மும்பை டூ நாக்பூர் விரைவுச் சாலை என தாய்லாந்து சாலைப் படத்தை பதிவிட்ட தினமலர் !

பரவிய செய்தி

மும்பை டு நாக்பூர் எக்ஸ்பிரஸ்வே ₹55,000 கோடியில் பிரமாண்ட சாலை.

News link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

மகாராஸ்டிராவில் மும்பை முதல் நாக்பூர் இடையே ரூ.55,000 கோடியில் பிரம்மாண்ட சாலையானது அமைய உள்ளதாக வீடியோ உடன் தினமலர் செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது.

அச்செய்தியில், ” மகாராஷ்டிராவில் மும்பை முதல் நாக்பூர் இடையே விரைவுச்சாலை திட்டம் 2015ல் அறிவிக்கப்பட்டது. 2018 டிசம்பரில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ” மகாராஷ்டிரா சம்ருத்தி மகாமார்க் ” எனப் பெயரிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நாக்பூர் முதல் ஷீரடி வரு 520 கி.மீ சாலை பணி முடிந்துள்ளன. வரும் 11ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். ஷீரடியில் இருந்து மும்பை வரையிலான சாலை அடுத்தாண்டு ஜூனில் திறக்கப்படும் ” என இடம்பெற்று இருக்கிறது.

தினமலர் வெளியிட்ட செய்தி வீடியோவில் நெடுஞ்சாலையின் படங்கள் பல பயன்படுத்தப்பட்டு உள்ளன. தினமலரின் செய்தியை பலரும் பகிர்ந்தும் வருகின்றனர்.

உண்மை என்ன ? 

டிசம்பர் 10ம் தேதி நரேந்திர மோடி ட்விட்டர் பக்கத்தில், டிசம்பர் 11ம் தேதி பிரதமர் மோடி மகாராஷ்டிராவில் நாக்பூர் முதல் ஷீரடி வரையிலான மகாமார்க் நெடுஞ்சாலை உட்பட பல திட்டங்களை தொடங்கி வைக்க இருப்பதாக வெளியான பதிவில் நெடுஞ்சாலையின் புகைப்படம் இடம்பெற்று உள்ளது.

Twitter link | Archive link

மேலும், மகாராஷ்டிரா சம்ருத்தி மகாமார்க் சாலையின் புகைப்படங்கள் சிலவற்றை மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பாட்னாவிஸ் மற்றும் ஒன்றிய அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோர் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளனர்.

Twitter link | Archive link

Twitter link | Archive link 

ஆனால், தினமலர் வெளியிட்ட வீடியோ செய்தியின் முகப்பில் பயன்படுத்திய பிரம்மாண்ட நெடுஞ்சாலையின் புகைப்படமானது அதிகாரப்பூர்வ பதிவுகள் எதிலும் இடம்பெறவில்லை. ஆகையால், அந்த புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” Adobe stock எனும் புகைப்பட விற்பனை தளத்தில் தாய்லாந்து நாட்டின் உள்கட்டமைப்பு என இப்புகைப்படம் பதிவாகி இருக்கிறது.

மேற்கொண்டு தேடிய போது, 2019ம் ஆண்டு மற்றொரு புகைப்பட விற்பனை தளமான shutterstock இணையதளத்தில் தாய்லாந்து நாட்டின் உள்கட்டமைப்பு என நெடுஞ்சாலையின் டைம்ஸ் லாப்ஸ் வீடியோ வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க : Image from Thailand is shared as Nagpur – Mumbai Samruddhi Expressway

இதே புகைப்படம், பாஜக ஆதரவாளர்களால் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட போது ஆங்கிலத்தில் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

முடிவு : 

நம் தேடலில், மும்பை டு நாக்பூர் எக்ஸ்பிரஸ்வே ரூ55,000 கோடியில் பிரம்மாண்ட சாலை என தினமலர் வெளியிட்ட வீடியோ செய்தியின் முகப்பில் பயன்படுத்திய பிரம்மாண்ட நெடுஞ்சாலையின் புகைப்படம் இந்தியாவைச் சேர்ந்தது அல்ல, அது தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader