அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீஸ் தாக்கியதாக பரவும் தவறான புகைப்படங்கள் !

பரவிய செய்தி

அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீஸ் பெல்ட்டால் அடித்து, மிதிப்பதாக பரவும் புகைப்படங்கள் !

மதிப்பீடு

விளக்கம்

ரிபப்ளிக் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்த மும்பை போலீஸ் பெல்டால் அடித்து, காலால் மிதித்து கொடூரமாக தாக்கியதாக இரு புகைப்படங்கள் இந்திய அளவில் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Twitter Archive link 

பாரதிய ஜனதா கட்சியின் செய்தித்தொடர்பாளர் கெளரவ் கோயல் என்பவர் தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், இது உண்மையாக இருந்தால் மகாராஷ்டிரா அரசு அழிவு நாளை வேண்டுகிறது எனக் குறிப்பிட்டு இவ்விரு புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement

உண்மை என்ன ?

மும்பையைச் சேர்ந்த கட்டிட வடிவமைப்பாளரான அன்வே நாயக் என்பவர் 2018-ல் தற்கொலை செய்து கொண்ட போது எழுதி வைத்த கடிதத்தில் தன்னுடைய மரணத்திற்கு அர்னாப் கோஸ்வாமி தான் காரணம் எனக் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட வழக்கை மீண்டும் கையில் எடுத்து விசாரணை தொடங்கப்பட்டு உள்ளதாகவும், இதற்காக அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீஸ் நேற்று(நவம்பர் 4-ம் தேதி) கைது செய்து அழைத்து சென்றதாக செய்திகள் வெளியாகின. கைது நடவடிக்கை மேற்கொள்ளும் போது ஒத்துழைப்பு வழங்காத காரணத்தினால் அர்னாபை போலீஸ் இழுத்து சென்ற காட்சி செய்திகளில் வெளியாகின. ஆனால், போலீஸ் தன்னை தாக்கியதாக அர்னாப் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்நிலையில், அர்னாப் கோஸ்வாமியை போலீஸ் கொடூரமாக தாக்கியதாக இரு புகைப்படங்கள் பரப்பப்பட்டு வருகிறது. அவ்விரு புகைப்படங்களை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2020 ஜனவரி 10-ம் தேதி நியூஸ் 18 இணையதளத்தில் ” Legs Held Up, Shoe on Face, Belt Buckle Beating: On Cam, UP Police’s Punishment for ‘Phone Thief’ ” எனும் தலைப்பில் வெளியான செய்தியில் இப்புகைப்படங்கள் இடம்பெற்று உள்ளன.

உத்தரப் பிரதேசத்தின் தேவ்ரியா மாவட்டத்தில் செல்போனை திருடிய நபரை காவல்துறையைச் சேர்ந்தவர்கள் ஷூ காலால் மிதித்து, பெல்ட்டால் அடித்து கொடூரமாக தாக்கிய வீடியோ வைரலாகியதாக செய்தியில் வெளியாகி இருக்கிறது.

Twitter link | Archive link

Bar & Bench எனும் யூடியூப் சேனலில் அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீஸ் கைது செய்த முழு வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் செல்போன் திருடியதாக கூறப்படும் நபரை காவல்துறையினர் கொடூரமாக தாக்கிய காட்சியை மும்பை போலீஸ் அர்னாபை தாக்கிய காட்சிகள் என தவறாக பரப்பி வருகிறார்கள்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button