This article is from Jul 19, 2020

“முருகன் தமிழ்க் கடவுள் இல்லை” என எல்.முருகன் கூறியதாக போலி ட்வீட்.

பரவிய செய்தி

முருகன் தமிழ்க் கடவுள் என்பதெல்லாம் திராவிடக் கூட்டம் கிளப்பிவிட்ட கதை . கலாச்சார ஏதிலிகளாக காட்டுமிராண்டிகளாக திரிந்த ஆதித்தமிழர்களை பண்படுத்தியது வைதீக வழிபாட்டு முறைகளே – முருகன், பா.ஜ.க தமிழக தலைவர்

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

கறுப்பர் கூட்டம் விவகாரத்தால் தமிழகத்தில் அரசியல் சார்ந்த மோதல்கள் உருவாகி இருப்பதையும், தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்படுவதையும் பார்க்க முடிகிறது. இதற்கிடையில், ” முருகன் தமிழ்க்கடவுள் என்பதெல்லாம் திராவிடக் கூட்டம் கிளப்பிவிட்ட ”  என தமிழக பாஜகவின் தலைவர் எல்.முருகன் கூறியது தமிழக பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியது போல் ஸ்க்ரீன்ஷார்ட் ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

இந்த ஸ்க்ரீன்ஷார்ட் விவகாரம் உண்மையா அல்லது பொய்யா என்பது குறித்தே இக்கட்டுரை வெளியிடுகிறோம். அவர்கள் அப்படி கூறக்கூடிய ஆட்கள் தான், அவர்களின் போராட்டத்திற்கு பின்னணி காரணம் இருக்கிறது என்கிற கமெண்ட்கள் கண்டிப்பாக வரும் என அறிந்ததால்  இதைக் கூறுகிறோம்.

உண்மை என்ன ?

தமிழக பாஜக மற்றும் எல்.முருகன் ஆகிய இருவரின் ட்விட்டர் பக்கத்திலும் இப்படியொரு கருத்து வெளியாகியதாக எந்தவொரு பதிவும் இல்லை. குறைந்தபட்சம் அப்படி பதிவுகள் வெளியாகி இருந்தால் யாரவது ஸ்க்ரீன்ஷார்ட் எடுத்து இருப்பார்கள். ஆனால், பரவும் ஸ்க்ரீன்ஷார்டில் நேரம், நாள் போன்ற குறியீடுகள் இல்லை. ஆக, இது எடிட் செய்யப்பட்ட போலி கருத்தாகவே இருக்க வாய்ப்புகள் அதிகம்.

இது தொடர்பாக, தமிழக பாஜகவின் தலைவர் எல்.முருகன் அவர்களை யூடர்ன் தரப்பில் தொடர்பு கொண்டு கேட்ட போது, ” இது வதந்தி ” என்கிற ஒற்றை வரியில் பதில் அளித்தார்.

கறுப்பர் கூட்டம் விவகாரத்தின் போது தமிழக பாஜக தரப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அது தொடர்பாக தமிழக பாஜக தலைவரின் ட்விட்டர் பக்கத்தில் ” கருப்பர் கூட்டம் யூடியூப் நிர்வாகிகளை கண்டித்து தமிழ்நாடு பாஜக ஆர்ப்பாட்டம். இன்று தமிழ்நாடு முழுவதும் எனது அறிவுறுத்தலின் பேரில் பாஜக நிர்வாகிகள் அனைவரும் தம்தம் வீடுகள்தோறும் அறப்போராட்டம் செய்தார்கள் ” என சில புகைப்படங்கள் உடன் வெளியாகி இருக்கிறது. அதில், இடம்பெற்ற பதாகைகளில் ” தமிழ்க்கடவுள் ” என இடம்பெற்று உள்ளதை காணலாம்.

Twitter link | archive link

இதுமட்டுமின்றி, தமிழக பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில், பொய் செய்தி பரவி வருவதாக போலியான ஸ்க்ரீன்ஷார்டை பதிவிட்டும் இருக்கிறார்கள்.

Twitter link | archive link

கட்சி தலைவர்கள் கூறியதாக போலியான நியூஸ் கார்டு, போலியான ட்வீட்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதை அதிகம் பார்க்க முடிகிறது. இதுபோல் சமூக வலைதளங்களில் பரவும் எந்தவொரு தகவல்களையும் உண்மைத்தன்மை தெரியாமல் பகிர வேண்டாம்.

மேலும் படிக்க : தா.பாண்டியன் சீனாவிற்கு ஆதரவு தருவதாக பரப்பப்படும் போலி நியூஸ் கார்டு !

முடிவு : 

நம் தேடலில், முருகன் தமிழ்க் கடவுள் என்பதெல்லாம் திராவிடக் கூட்டம் கிளப்பிவிட்ட கதை . கலாச்சார ஏதிலிகளாக காட்டுமிராண்டிகளாக திரிந்த ஆதித்தமிழர்களை பண்படுத்தியது வைதீக வழிபாட்டு முறைகளே என பா.ஜ.க தமிழக தலைவர் முருகன் கூறியதாக பரவும் தகவல் தவறானது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader