அருப்புக்கோட்டை கோவிலில் முருகன் சிலை கண் திறந்ததா ?

பரவிய செய்தி
அருப்புக்கோட்டை முருகன் கோவிலில் முருகன் கண் திறந்து பார்த்த வீடியோ மக்களிடையே வைரலாகி வருகிறது கருவிழியும் வெள்ளை படலமும் நேர்த்தியாக தெரிகிறது.
மதிப்பீடு
விளக்கம்
அருப்புக்கோட்டை தட்டாங்குளம் லிங்கேஸ்பரர் கோவிலில் உள்ள முருகப்பெருமான் சிலை கண் திறந்த நிலையில் இருக்கும் அதிசய காட்சி என 1.56 நிமிட கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பில் இருந்து கேட்கப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
கோவில்களில் உள்ள கடவுள் சிலைகள் கண் திறப்பதாக மக்களிடையே அவ்வபோது செய்திகள் பரவுவது உண்டு. அத்தகைய தகவல்களால் கோவில்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
அருப்புக்கோட்டை அருகே தட்டாங்குளம் லிங்கேஸ்பரர் கோவிலில் உள்ள முருகன் சிலை கண் திறந்ததாக 1.56 நிமிட கடந்த சில நாட்களாக வைரலாகிக் கொண்டிருக்கிறது. 1.56 நிமிட வீடியோவில், முருகன் சிலையின் முகம் முழுவதும் திருநீறு பூசப்பட்டு, வாய் மற்றும் நெற்றில் குங்குமம் பூசப்பட்டுள்ளது.
சிலையின் கண் பகுதிக்கு மட்டும் எண்ணெய் போன்ற ஒன்றை தடவி உள்ளார்கள் என்பது அது வழிந்து ஓடுவதில் இருந்து அறிய முடிகிறது. சிலையின் கண் திறந்ததாக வீடியோவிலும் பேசிக் கொண்ட எடுத்து உள்ளனர். ஆனால், சிலை கண் திறந்ததாக கூறுவது முற்றிலும் தவறான தகவல்.
சிலையின் வலதுபுற கண் மட்டுமே மனித கண் திறந்து பார்ப்பது போன்று தெரிகிறது. ஆனால், இடதுபுற கண்ணில் அப்படி ஏதும் தெரியவில்லை. இந்த சிலையின் வலது கண் ஓரத்தில் திருநீறு இருப்பதும், கண்களில் தேய்க்கப்பட்டு இருக்கும் எண்ணெயில் ஒளி தெரிவதும் பார்ப்பதற்கு மனித கண்ணை போன்று தெரிந்து இருக்கிறது. எனினும், அருகே இருக்கும் மற்றொரு கண்ணில் அப்படி எந்தவொரு அடையாளமும் தெரியவில்லை என்பதை வீடியோவை உன்னிப்பாக கவனிக்கையில் அறிய முடிந்தது.
சிலையின் கண்ணில் தேய்க்கப்பட்டு இருக்கும் எண்ணெயில் செல்போனின் வெளிச்சமோ, விளக்கின் வெளிச்சமோ பிரதிபலித்திற்க வேண்டும். ஏனெனில், வீடியோ எடுக்கும் கோணம்மாறும் போது சில இடங்களில் வெளிச்சம் மறைவதும், இடது கண்ணிற்கு மாறுவதையும் காண முடிந்தது.
மேலும் படிக்க : சிதம்பரம் கோவிலில் நடராஜர் சிலையின் மீது மட்டும் மழை பெய்ததா ?
சில நாட்களுக்கு முன்பாக, சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள நடராஜர் சிலைக்கு மட்டும் மழை பெய்யும் அதிசய வீடியோ என விளக்கின் வெளிச்சத்தில் மழை தனியாகத் தெரியும் வீடியோவை தவறாகப் பரப்பினர். கடந்த வருடம் கூட, இலங்கையில் உள்ள தேவாலயத்தில் மாதா சிலையின் கண்ணில் இருந்து கண்ணீர் வந்ததாக வதந்தி பரவியது.
மேலும் படிக்க : இலங்கை தேவாலயத்தில் மாதா சிலை கண்ணில் கண்ணீரா ?
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.