புர்ஜ் கலீஃபாவில் கர்நாடகா மாணவி முஸ்கான் புகைப்படம், பெயர் இடம்பெற்றதா ?

பரவிய செய்தி

வீரப் பெண்மணி அல்லாஹ் அக்பர் என்று துணிவுடன் கூறி உலகப் புகழ் அடைந்து விட்டாய் உன் வீரத்தை அல்ஜசீரா முதலில் கொண்டாடி துவக்கி வைத்தது தற்போது எமிரேட்ஸ் கொண்டாடி உன் புகழைப் பாடுகிறது.

Facebook link 

மதிப்பீடு

விளக்கம்

கர்நாடகாவில் அல்லா-ஹூ-அக்பர் என கோசமிட்டு இந்திய அளவில் பிரபலமாகிய கல்லூரி மாணவி முஸ்கானின் வைரல் புகைப்படம் மற்றும் பெயர் துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபாவில் இடம்பெற்றதாக 2.50 நிமிட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ?  

அல்லா-ஹூ-அக்பர் என கோசமிட்டு இந்திய அளவில் வைரலான கர்நாடகாவைச் சேர்ந்த முஸ்லீம் மாணவி பெயர் ” Muskan ” என்றே செய்திகளில் வெளியாகியது. ஆனால், வைரல் செய்யப்படும் வீடியோவில் ” Muskahan ” என இடம்பெற்று இருக்கிறது.

மேலும், வைரல் செய்யப்படும் 2.50 நிமிடம் கொண்ட வீடியோவில் 1.50வது நிமிடத்தில் இருந்து புர்ஜ் கலீஃபாவின் காட்சி மறைந்து வெறும் பெயர் மட்டுமே தெரிவதை பார்க்க முடிந்தது. இதை டிக்டாக் வீடியோவாக செய்து வெளியிட்டு இருக்கிறார்கள்.

Twitter link 

புர்ஜ் கலீஃபாவின் உடைய ட்விட்டர் பக்கத்தில் தேடுகையில், ” 2022 ஜனவரி 6-ம் தேதி பதிவான வீடியோவில் புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் இடம்பெற்ற லைட் காட்சிகள் வைரல் செய்யப்படும் வீடியோவில் இருப்பதை பார்க்க முடிந்தது.

மேலும் படிக்க : கர்நாடகாவில் அல்லா-ஹூ-அக்பர் என கோசமிட்ட மாணவியின் புகைப்படங்கள் எனப் பரப்பப்படும் வதந்தி !

இதற்கு முன்பாக, கர்நாடக மாணவி முஸ்கான் குறித்து தவறான புகைப்படங்கள் மற்றும் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்களை வைத்து பல வதந்திகள் வைரல் செய்யப்பட்டன.

முடிவு : 

நம் தேடலில், கர்நாடகாவில் அல்லா-ஹூ-அக்பர் என கோசமிட்ட கல்லூரி மாணவி முஸ்கானின் வைரல் புகைப்படம் மற்றும் பெயர் துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபாவில் இடம்பெற்றதாக பரப்பப்படும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.

Please complete the required fields.
Back to top button
loader