This article is from Mar 03, 2021

மத பின்னணியுடன் இந்தியாவில் பரப்பப்படும் இலங்கை சிசிடிவி வீடியோ!

பரவிய செய்தி

தொப்புள் கொடி உறவின் செயல் இந்தியர்களே பத்திரமா இருங்க.

Facebook link | Archive link

மதிப்பீடு

விளக்கம்

வீடியோவில், அமைதியாக நிற்கும் முஸ்லீம் நபர் கையில் மறைத்து வைத்திருக்கும் இரும்பு கம்பியால்அருகே வரும் மற்றொரு நபரை தாக்குவதும், இதையடுத்து அருகே இருப்பவர்கள் தாக்கப்பட்டவரை ஆட்டோவில் ஏற்றி அங்கிருந்து அழைத்து செல்லும் அதிர்ச்சியான சிசிடிவி காட்சிகள் பதிவாகி இருக்கின்றன.

Archive link 

1.30 நிமிடம் கொண்ட இவ்வீடியோ தமிழ், இந்தி என பல மொழிகளில் இந்தியாவில் பகிரப்பட்டு வருகிறது. முஸ்லீம் நபர் இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவரை தாக்கியதாக தலைப்பிட்டு இவ்வீடியோவை ட்விட்டர் உள்ளிட்டவையில் ஆயிரக்கணக்கில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

சிசிடிவி வீடியோவை பார்ப்பவர்கள் பேசும் மொழி சிங்கள மொழியைப் போல் உள்ளது. வீடியோவில் வரும் ஆட்டோ இலங்கையைச் சேர்ந்ததாகவும் இருக்கிறது. வீடியோவின் கமெண்ட்களில் கூட சிலர் ” இலங்கை ” நாட்டைக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

பிப்ரவரி 26-ம் தேதி Accident Prevention 1st எனும் இலங்கை முகநூல் பக்கத்தில், இவ்வீடியோ உடன் சிங்க மொழியில் குறிப்பிட்ட பதிவில், இலங்கை கண்டியில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக கூட இருக்கலாம் எனக் குறிப்பிட்டு இருந்தனர். இச்சம்பவம் தொடர்பாக இலங்கை செய்திகளில் ஏதும் வெளியாகவில்லை.

பேக்ட் கிரஸண்டோ தளம் இச்சம்பவம் கண்டியின் கலஹா பகுதியில் நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டு உள்ளது. மேலும், ” இந்த தாக்குதல் மதம் சார்ந்த காரணத்தால் நிகழவில்லை. அந்த முஸ்லீம் நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர். உடனடியாக, அவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ” கலஹா காவல்நிலையத்தைச் சேர்ந்த ரொட்ரிகோ பேக்ட் கிரஸண்டோ இலங்கை பிரிவிற்கு விளக்கம் அளித்து உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : நம் தேசத்தில் நிகழ்ந்ததாக பரப்பும் பாகிஸ்தான் நாட்டின் வீடியோ !

இதற்கு முன்பாக, பாகிஸ்தான் நாட்டில் குழந்தைகளிடம் பாலியல் ரீதியான துன்புறுத்தலில் ஈடுபட முஸ்லீம் நபரின் சிசிடிவி காட்சியை இந்தியாவில் மத கருத்துக்களுடன் தவறாக பரப்பி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவு : 

நம் தேடலில், முஸ்லீம் நபர் இந்து ஒருவரை கொடூரமாக தாக்கியதாக இந்தியாவில் பரப்பப்படும் வீடியோ இலங்கையில் நடந்த சம்பவம். மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், தாக்குதலுக்கு மத பின்னணி ஏதுமில்லை என்றும் அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader