இந்து இளைஞரை முஸ்லீம்கள் தாக்கி படுகொலை செய்வதாகப் பரவும் வீடியோ. உண்மை என்ன ?

பரவிய செய்தி

இந்து இளைஞரை முஸ்லீம் கும்பல் தாக்கி கொலை செய்யும் காட்சி !

Twitter link 

மதிப்பீடு

விளக்கம்

முஸ்லீம் கும்பல் ஒரு இளைஞரை தாக்கிய கட்டிடத்தின் உள்ளே இழுத்து செல்லும் காட்சியுடன் முதல் பகுதி வீடியோ முடிவடைகிறது, அடுத்ததாக ஓர் இடத்தில் கை, வாய் கட்டப்பட்ட நிலையில் இருக்கும் இளைஞரின் கழுத்தை வாளால் வெட்டி படுகொலை செய்யும் காட்சி என 30 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Archive link 

இது எங்கு, எதனால் நிகழ்ந்தது என தெரியாமல் ஒருவர் பதிவிட்ட பதிவை இந்து மக்கள் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில், ” எங்கு நிகழ்ந்தது ” எனக் கேள்வி எழுப்பி பகிரப்பட்டு உள்ளது.

உண்மை என்ன ? 

முஸ்லீம்கள் இளைஞரை தாக்கும் வீடியோ குறித்து தேடுகையில், ” மேற்கு வங்கத்தை போன்று தற்போது உத்தரப் பிரதேசத்தின் முசாஃபர்நகர் மாவட்டத்தில் முஸ்லீம் அதிகம் வாழும் கிராமத்தில் லைன்மேன் தாக்குதலுக்கு உள்ளாக்கியதாக ” 2021 மே 5-ம் தேதி உத்தரப் பிரதேசத்தில் பாஜகவைச் சேர்ந்தவர் ட்விட்டர் பக்கத்தில் அந்த இளைஞர் தாக்கப்படுவதற்கு முன்பு இருந்தே எடுக்கப்பட்ட வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்.

Twitter link | Archived link 

இதற்கு  பதில் அளித்த முசாஃபர்நகர் காவல்துறை, ” இது தொடர்பாக போப்பா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு நடவடிக்கைப்படும் ” எனத் தெரிவித்து இருந்தனர்.

” முசாஃபர்நகர் மாவட்டம் சிக்ரி பகுதியைச் சேர்ந்த லைன்மேன் அனுஜ் மின் இணைப்பு தொடர்பான பிரச்சனையை சரிசெய்ய சென்ற போது அக்கிராமத்தைச் சேர்ந்த சல்மான் மற்றும் அவரது சகோதரர் கேபிளை மாற்றித் தருமாறு கேட்டுள்ளனர். ஆனால், இணை பொறியாளரின் அனுமதி இல்லாமல் மாற்றி தர இயலாது என மறுத்துள்ளார். இதனால் சல்மான் மற்றும் அவரது சகோதரர் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து அனுஜ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கி உள்ளனர்.

அனுஜ் உடன் வந்த பிற பணியாளர்கள் அங்கிருந்து காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். இதையடுத்து 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ” 2021 மே 5-ம் தேதி அமர்உஜாலா செய்தியில் வெளியாகி இருக்கிறது.

படுகொலை வீடியோ : 

அடுத்ததாக, இளைஞர் படுகொலை செய்யப்படும் வீடியோ குறித்து தேடுகையில், ” 2018-ல் வடஅமெரிக்காவில் உள்ள வெனிசுலாவில் போதைப் பொருள் மாஃபியாவால் கடத்தப்பட்ட 13 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்டதாக ” News.com.au இணையதளத்தில் புகைப்படங்கள் உடன் வெளியாகி இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், இந்து இளைஞர் ஒருவரை தாக்கிய முஸ்லீம் கும்பல் அவரை படுகொலை செய்ததாக பரப்பப்படும் வீடியோ தவறானது. இளைஞர் தாக்கப்படும் வீடியோ 2021 உத்தரப் பிரதேசம் முசாஃபர்நகர் மாவட்டத்தில் நிகழ்ந்தது, படுகொலை செய்யப்படும் வீடியோ 2018-ல் வெனிசுலாவில் நிகழ்ந்த வேறொரு சம்பவம் என அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button