அபராதம் விதித்ததால் இஸ்லாமிய பெண் போலீசை தாக்கியதாக பரவும் பழைய வீடியோ !

பரவிய செய்தி
பரேலி சிவில் லைன்ஸ் செய்தி. காவல்துறை அபராத சல்லான் போட்டதால், இந்த வீடியோ, இந்தியாவில் என்ன நடக்கும், யார் நாட்டை நடத்துவார்கள், அனைவரின் எதிர்காலம் என்னவாக இருக்கும், உண்மை என்னவென்றால் நாட்டுக்கு வெளியில் இருக்கும் ஆபத்தை விட அதிகம் உள்ளே ஆபத்து உள்ளது ,இசுலாமிய பெண்.
மதிப்பீடு
விளக்கம்
காவல்துறையைச் சேர்ந்த ஒருவரை பெண் உள்பட சிலர் தாக்கும் 25 நொடிகள் கொண்ட வீடியோ பரேலி பகுதியில் காவல்துறையினர் அபராத விதித்த போது நிகழ்ந்ததாக ட்விட்டர் உள்ளிட்டவையில் பகிரப்பட்டு வருகிறது. இந்திய அளவிலும் மதம் சார்ந்த அச்சுறுத்தலுடன் இவ்வீடியோ சுற்றி வருகிறது.
உண்மை என்ன ?
காவலரை தாக்கும் பெண்ணின் வீடியோ குறித்து தேடுகையில், 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி ஜக்ரான் எனும் இந்தி செய்தி இணையதளத்தில் வீடியோ காட்சியின் புகைப்படத்துடன் செய்தி வெளியாகி இருக்கிறது.
” காசியாபாத்தின் லோனி பகுதியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ஒருவர் ஆதார் கார்டை இணைப்பதற்காக டோக்கன் கேட்ட போது அலுவலர் கொடுக்க மறுத்து உள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்ட போது அங்கு வந்த காவலர் அவரை அங்கிருந்து துரத்தி இருக்கிறார்.
சிறிதுநேரத்தில், அவர் தன்னுடைய குடும்பத்தினரை அழைக்கையில், மேலும் வாக்குவாதம் ஏற்பட்ட போது காவலர் அவரை அடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த நபரின் சகோதரி காவலரை தாக்கி உள்ளார். இதுதொடர்பாக ரஷீத் மற்றும் இஸ்மாயில் எனும் இருவரை போலீசார் கைது செய்து உள்ளதாக ” india.com செய்தியில் 2018-ல் வெளியாகி இருக்கிறது.
2018-ம் ஆண்டில் வைரலான வீடியோ குறித்து Aaj Tak உள்ளிட்ட பல செய்திகள் தளங்களில் செய்தியறிக்கை வெளியாகி இருக்கிறது. காசியாபாத்தின் எஸ்எஸ்பி வைபவ் கிருஷ்ணா சம்பவம் குறித்து பேசிய வீடியோவும் காசியாபாத் போலீஸ் 2018-ல் வெளியிட்டு உள்ளது.