This article is from Apr 02, 2020

முஸ்லீம்கள் தும்மல் மூலம் கொரோனாவை பரப்புவதாக வதந்தி வீடியோ !

பரவிய செய்தி

கொரோனா ஜிகாத். தும்மல் மூலம் கொரோனாவை தங்களுக்குள் பரவ செய்து பின் மற்றவர்களை அழிப்பது. முடியலடா உங்கள் மதவெறிக்கு அளவே இல்லையா.

Facebook link | archived link

மதிப்பீடு

விளக்கம்

முஸ்லீம்கள் கூட்டமாய் அமர்ந்து கொண்டு தும்மல்கள் மூலம் கொரோனாவை பரப்பச் செய்கிறார்கள் என கீழ்காணும் வீடியோ முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மதம் சார்ந்து வைரல் செய்யப்படுகிறது. இதன் உண்மைத்தன்மையை கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

இத்தகைய வீடியோவை வைத்து முஸ்லீம்கள் கொரோனாவை பரப்புவதாகவும், டெல்லி நிஜாமுதீன் முஸ்லீம்கள் மாநாட்டில் கலந்து கொண்டு செய்யப்பட்ட காரியம் என இந்திய அளவில் வைரல் செய்தும் வருகிறார்கள். ஆனால் வீடியோ குறித்து தேடுகையில், வைரலாகும் வீடியோ சமீபத்தில் எடுக்கப்பட்டது அல்ல என்பதை அறிய முடிந்தது.

Twitter link | archived link

Youtube link | archived link 

ஜனவரி 30-ம் தேதி பாகிஸ்தானி கொரோனா வைரஸ் என ட்விட்டர் பக்கம் ஒன்றில் இவ்வீடியோ பதிவாகி இருக்கிறது. அதேபோல், ஜனவரி 30-ம் தேதி யூடியூப் சேனல் ஒன்றிலும் இவ்வீடியோ வெளியாகி இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட முதல் வழக்கு ஜனவரி 30-ம் தேதி வெளியாகியது. அதற்கு முன்பாகவே இந்த வீடியோ பாகிஸ்தான் நாட்டுடன் தொடர்புபடுத்தி வைரல் ஆகி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

வீடியோவில் அமர்ந்து இருக்கும் மக்கள் தும்முவதாக கூறுவது தவறாகும், அங்குள்ள அனைவரும் சூபிசம்(Sufism)-ல் அதிகம் கடைபிடிக்கப்படும் zikr அல்லது zikir எனும் வழிபடும் முறையை மீண்டும் மீண்டும் செய்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

Youtube link | archived link

வைரலாகும் வீடியோவிற்கும் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டிற்கும் தொடர்பில்லை என்பதை அறிய முடிகிறது. மாநாட்டின் நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு முன்பே இவ்வீடியோ வைரலாகி இருக்கிறது. முஸ்லீம் மக்கள் வழிபடும் முறையை பாகிஸ்தான் நாட்டுடன் தொடர்புபடுத்தியும் வைரல் செய்து இருக்கிறார்கள். எனினும், இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது, எப்பொழுது பதிவாகியது என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.

மேலும் படிக்க : முஸ்லீம்கள் எச்சில் மூலம் கொரோனாவை பரப்புவதாக பரவும் தவறான வீடியோ!

சமூக வலைதளங்களில் கொரோனா வைரசை முஸ்லீம்களே திட்டமிட்டு பரப்புவதாக மத துவேசத்தை பரப்பி வருகிறார்கள். உலகளாவிய நோய் தொற்று நிலவும் நேரத்தில் தவறான தகவல்களை பரப்பாமல் சரியான தகவல்களை அறிந்து பகிரவும்.

Please complete the required fields.




Back to top button
loader