சிங் போல் தலைப்பாகை அணிந்து போராடிய இஸ்லாமியர் கைதா ?

பரவிய செய்தி

இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக அனைத்து மதத்தினரும் பாேராடுகிறார்களே, எப்படி.??? இதோ இப்படிதான். சிங்கு பாேல வேடமிட்டு பிரிவினை பாேராட்டம் நடத்திய இஸ்லாமியர் கைது.

Facebook link | archived link 

மதிப்பீடு

விளக்கம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புகள் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் போராட்டங்கள் குறித்த பல போலியான தகவல்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ஆக்கிரமித்து உள்ளன.

Advertisement

இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக அனைவரும் போராடுகிறார்கள், அது எப்படி என்றால் இப்படிதான். சிங்கு போல் தலைப்பாகை வைத்துக் கொண்டு வேடமணிந்து போராடிய இஸ்லாமியரை போலீசார் கைது செய்து அழைத்து செல்வதாக வீடியோ ஒன்றை Tamilthamarai என்ற முகநூல் பக்கத்தில் பகிர்ந்து இருந்தனர். மேலும், முகநூல் குழுக்களிலும் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை என்ன ?

சீக்கியர்கள் அணியக்கூடிய தலைப்பாகையை போலீசார் அகற்றி விட்டு, அவரை இழுத்து செல்லும் காட்சிகள் தொடர்பாக, ” Singh turban removed by police ” என்ற வார்த்தைகளை கொண்டு தேடிய பொழுது, 2011-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி ” Sikh Youth’s turban removed 28 March 2011 @ Mohali Stadium Mohali Stadium by a Punjab Police ” என்ற தலைப்பில் வெளியான யூடியூப் வீடியோ கிடைத்தது.

Advertisement

யூடியூப் சேனலில் வெளியான தலைப்பில் இருந்து பஞ்சாப் போலீஸ் அதிகாரிகள் சீக்கிய இளைஞரின் தலையில் இருந்து தலைப்பாகையை அகற்றியதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்திகளை தேடிய பொழுது, 2011-ம் ஆண்டு மார்ச் 22-ம் தேதி வெளியான டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில், பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலியில் உள்ள பிசிஏ மைதானத்தின் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கால்நடை மருந்தாளுனருக்கும், பஞ்சாப் போலீசுக்கும் இடையே நடத்த சம்பவம் குறித்து வெளியாகி இருக்கிறது.

Youtube link | archived link 

தங்களின் வேலையை ஒழுங்குமுறைப்படுத்தக் கோரி ஏற்கனவே காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த நூற்றுக்கணக்கான கால்நடை மருந்தாளுனர்கள் மைதான அரங்கத்தை நோக்கி அணிவகுத்து உள்ளனர். அந்த மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் சில தினங்களில் நடைபெற இருந்தது. பாதுகாப்பு பகுதி என்பதால் அங்கு வந்த கூட்டத்தை கலைக்க போலீசார் முயன்றுள்ளனர் என்பதை செய்திகளில் இருந்து அறிந்து கொள்ள முடிந்தது.

2011 ஏப்ரல் 11-ம் தேதி சீக்நெட் என்ற இணையதளத்தில், சீக்கியரின் தலைப்பாகையை அகற்றிய காவல்துறை அதிகாரிக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக வீடியோவில் இடம்பெற்ற காட்சியை புகைப்படமாக வைத்துள்ளனர்.

முடிவு : 

நம்முடைய தேடலில் இருந்து, 2011-ல் பஞ்சாப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சீக்கியரின் தலைப்பாகையை காவல்துறை அகற்றிய வீடியோ காட்சியை குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சிங் வேடத்தில் போராடிய இஸ்லாமியர்களை போலீசார் கைது செய்ததாக தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button