Fact Checkஅரசியல்இந்தியாசமூக ஊடகம்

இந்திய ஆற்றுப் பயண கப்பல் என வெளிநாட்டு சொகுசு கப்பல் படத்தை பயன்படுத்திய தமிழ்நாடு பாஜக !

பரவிய செய்தி

உலகின் நீளமான ஆற்றுவழி கப்பல் (MV கங்கா விலாஸ்) பயணம் தென்கிழக்கு ஆசியாவின் கலாச்சார ஒருங்கிணைப்பு, சுற்றுலாத் துறை வளர்ச்சி ஆகியவற்றுக்கு வழிவகுத்துள்ளது – கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால்

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

லகின் நீளமான ஆற்றுவழிப் பயண கப்பலான எம்வி கங்கா விலாஸ் பயணம் தென்கிழக்கு ஆசியாவின் கலாச்சார ஒருங்கிணைப்பு மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றிற்கு வழிவகுத்து உள்ளது என ஒன்றிய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் கூறியுள்ளதாக மார்ச் 2ம் தேதி தமிழ்நாடு பாஜக கார்டு ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறது.

Advertisement

தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியான இப்பதிவை பாஜகவைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை என்ன ?  

தமிழ்நாடு பாஜக பதிவிட்ட எம்வி கங்கா விலாஸ் குறித்து தேடுகையில், 2023 பிப்ரவரி 25ம் தேதி ஏஎன்ஐ செய்தி முகமை, ” உலகின் மிக நீளமான ஆற்றுக் கப்பல் எம்வி கங்கா விலாஸ் பிப்ரவரி 28ம் தேதி அசாமின் திப்ருகாரில் தனது பயணத்தை நிறைவு செய்கிறது ” என ட்விட்டரில் பதிவிட்டு உள்ளது. ஆனால், செய்தியில் வெளியான புகைப்படங்களில் கப்பலின் தோற்றம் வேறாக இருக்கிறது.

Twitter link

மேற்கொண்டு தேடுகையில், கங்கா விலாஸ் கப்பலின் உள்ளே எப்படி இருக்கும் என்பதை தி ஹிந்து தன்னுடைய யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டு இருக்கிறது.

தமிழ்நாடு பாஜக பதிவில் இடம்பெற்ற அமைச்சர் சர்பானந்த சோனோவால் குறித்து தேடுகையில் மார்ச் 1ம் தேதி அவரது ட்விட்டர் பக்கத்தில், ” உலகின் மிக நீளமான ஆற்றுப் பயணமான எம்வி கங்கா விலாஸ் திப்ருகாரில் தனது முதல் பயணத்தை நிறைவு செய்கிறது. 3200 கிமீ மற்றும் 27 நதி அமைப்புகளை உள்ளடக்கிய இந்த கப்பல் பயணம் புனித வாரணாசியில் இருந்து வங்கதேசம் வழியாக அசாம் சென்றடைகிறது ” என கப்பலின் புகைப்படங்கள் உடன் பதிவிட்டு இருக்கிறார். அவரது பதிவை நரேந்திர மோடி ட்விட்டர் பக்கம் பகிர்ந்து உள்ளது.

Twitter link | Archive link 

செய்திகள் மற்றும் அமைச்சர் சர்பானந்த சோனோவால் பதிவிட்ட பதிவுகளில் உள்ள எம்வி கங்கா விலாஸ் கப்பலின் தோற்றமும், தமிழ்நாடு பாஜக பதிவிட்ட படத்தில் உள்ள கப்பலின் தோற்றமும் வேறாக உள்ளது. 

தமிழ்நாடு பாஜக பதிவிட்ட கப்பலின் படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2018ல் thebillfold எனும் இணையதளத்தில் அந்த சொகுசு கப்பலின் புகைப்படம் பதிவாகி இருக்கிறது. மேலும், 2017ல் SPORTS TRAVELS எனும் ட்விட்டர் பக்கத்தில் அதே புகைப்படம் பதிவிடப்பட்டு இருக்கிறது.

Twitter link | Archive link 

பாஜக பயன்படுத்திய புகைப்படத்தில் உள்ள சொகுசு கப்பலின் பின்புறத்தில் ” Regal Princess “ என எழுதப்பட்டு இருக்கிறது. ரீகல் பிரின்சஸ் (Regal Princess) சொகுசு கப்பல் Princess Cruises எனும் நிறுவனத்தைச் சேர்ந்தது. இதன் தலைமையகம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமைந்துள்ளது.

மேலும் படிக்க : இந்திய கடற்படை தினத்திற்கு அமெரிக்க கப்பல் படத்தை பயன்படுத்திய தமிழக பாஜக!

இதற்கு முன்பாக, 2020ம் ஆண்டு இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக பதிவிட்ட பதிவில் அமெரிக்க கப்பலின் படத்தைப் பயன்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

முடிவு : 

நம் தேடலில், எம்வி கங்கா விலாஸ் கப்பல் பயணம் குறித்து தமிழ்நாடு பாஜகவின் பதிவில் பயன்படுத்தப்பட்ட புகைப்படம் கங்கா விலாஸ் கப்பலின் புகைப்படம் அல்ல, அது ரீகல் பிரின்சஸ் எனும் சொகுசு கப்பலின் புகைப்படம் என்பதை அறிய முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button