நாகலாந்தில் ராணுவம் தாக்க உள்ளூர் மக்கள் தூண்டுவதாக பரப்பப்படும் வதந்தி வீடியோ!

பரவிய செய்தி

மதிப்பீடு

விளக்கம்

நாகலாந்தில் பாதுகாப்பு படையினர் கிளர்ச்சியாளர்கள் என தவறாகக் கருதி பொதுமக்களை சுட்டுக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், கண்டனத்தையும் பெற்றது.

மேலும் படிக்க : நாகலாந்தில் ராணுவத்தினரால் பொதுமக்கள் சுட்டுக் கொலை.. சிறப்பு விசாரணைக்கு உத்தரவு !

இந்நிலையில், நாகலாந்தில் உள்ளூர் மக்கள் ராணுவத்தை தாக்குதல் செய்யும் வகையில் ஆத்திரமடையச் செய்வதாகவும், அதற்கு ராணுவத்தினர் எவ்வளவு நிதானமாக இருக்கிறார்கள் எனக் கூறி 29 நொடிகள் கொண்ட வீடியோ இந்திய அளவில் பரப்பப்பட்டு வருகிறது.

Twitter link 

29 நொடிகள் கொண்ட வீடியோவில், தோட்டத்தில் கையில் ஆயுதங்கள் வைத்திருக்கும் சிலர் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்களிடம் வாக்குவாதத்திலலும், மோதலிலும் ஈடுபடுகிறார்கள். பின்னர் அவர்களை விரட்ட ராணுவ வீரர்கள் தரையில் சுடும் காட்சிகள் பதிவாகி இருக்கின்றன.

உண்மை என்ன ?

நாகலாந்து சம்பவத்துடன் தொடர்புப்படுத்தி பரப்பப்படும் வீடியோ இந்தியாவைச் சேர்ந்ததே அல்ல. 2018 ஜனவரி 7-ம் தேதி யூடியூப் சேனல் ஒன்றில் கொலம்பியா ராணுவம் மீது தாக்குதல் நடத்துவதாக அதே காட்சிகள் அடங்கிய 1.41 நிமிட வீடியோ பதிவாகி இருக்கிறது.

2018 ஜூலை 18-ம் தேதி கொலம்பியாவின் தேசிய செய்தித்தாளான எல் டைம்போ, கொலம்பியாவின் கொரிண்டோவில் 2018 ஜனவரியில் நடந்த வைரல் வீடியோ சம்பவம் குறித்து வெளியிட்ட கட்டுரையில், சட்டவிரோதமாக சொத்தை ஆக்கிரமித்துள்ள உள்ளூர்வாசிகளின் குழுவை படையினர் கைது செய்ய முயன்றதாகக் கூறப்பட்டுள்ளது.

முடிவு : 

நம் தேடலில், நாகலாந்தில் உள்ளூர் மக்கள் ராணுவத்தினரை தாக்குதலுக்கு தூண்டி விடுவதாக பரப்பப்படும் வீடியோ இந்தியாவைச் சேர்ந்தது அல்ல, 2018-ல் கொலம்பியாவில்  எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button