This article is from Aug 09, 2018

திரையில் வில்லன் நிஜத்தில் ஹீரோ: நானா படேகர்.

பரவிய செய்தி

நானா படேகர் கார்கில் போரில் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர், தனது வருமானத்தில் 90 சதவீதத்தை விவசாயிகளின் நலனுக்கு நன்கொடையாக வழங்குகிறார். வறட்சி பாதித்த 4 கிராமங்களை தத்தெடுத்துள்ளார். தனது வாழ்க்கையை ஏழை மக்களுக்காக அர்பணித்தவர். சிறந்த திரைப்பட நடிகரான இவர் நிஜ வாழ்கையில் ஒரு ஹீரோ தான்.

மதிப்பீடு

விளக்கம்

காலா திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்த நடிகர் நானா படேகர் பல இந்திய திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். சிறந்த நடிகரான நானா படேகர் தனது தனிப்பட்ட வாழ்வில் ஒரு உயர்ந்த உள்ளம் கொண்ட மனிதராகவே திகழ்கிறார். திரையில் வரும் ஹீரோக்கள் ரசிகர்களின் உள்ளங்களை மட்டுமே வெல்கின்றனர். ஆனால், நானா படேகர் நிஜ ஹீரோ ஆவார்.

வருமானத்தை நன்கொடையாக வழங்குகிறார் :

Krantiveer என்ற படத்திற்கு பிறகு Rahul rawail என்பர் இயக்கத்தில் உருவாக்கிய திரைப்படத்தில் ஒப்பந்தம் ஆகிய நானா படேகர் தனக்கு கிடைத்த வருமானத்தில் அதிக தொகையை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கினார். நானா சார்பாக Rahul rawail ரூ.10 லட்சம் என மூன்று காசோலைகளாக medha patkar, baba amte, apang sahikari sansha என்ற புனேவைச் சேர்ந்த தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கினார்.

“ நான் தொண்டு நிறுவனங்களுக்காக நன்கொடை வழங்கவில்லை. நான் எனது திருப்திக்காக செய்கிறேன். நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன். இறக்கும் போதும்  நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவனாகவே இருப்பேன் “ என்று தனது செயல் குறித்து நானா தெரிவித்து இருந்தார்.

கார்கில் போர் :

கார்கில் போரில் இந்திய ராணுவத்தில் நானா படேகர் பங்கு பெற்றதாக கூறுவது தவறு. 1999-ல் prahaar என்ற திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனினும், அந்தப் படத்தில் அவருக்கு கிடைத்த கதாப்பாத்திரம் ஏமாற்றத்தை அளித்ததாக கூறியுள்ளார். காரணம், அப்படத்தில் அவர் ராணுவ வீரராக நடித்துள்ளார். இதற்காக  “Marath light infantry “ இல் இரண்டரை ஆண்டுகள் தீவிரப் பயிற்சி பெற்றார். அதில், பயிற்சியின் போது விபத்து ஏற்பட்டால் எவ்விதப் பொறுப்பும் இல்லை என ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நமது மிகச்சிறந்த ஆயுதம் bofors, AK இல்லை, நமது ராணுவ வீரர்களே என்று கூறிய நானா படேகர் ” தன்னால் ராணுவத்தில் சேர முடியவில்லை”  என தெரிவித்திருந்தார். ஏனெனில், என் கல்வி தகுதி பட்டப்படிப்புக்கு நிகரானது இல்லை என்று தெரிவித்து இருந்தார்.

NAAM Foundation :

பல ஆண்டுகளாக தனது வருமானத்தில் மிகப்பெரிய தொகையை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கி வந்த நானா அறக்கட்டளை ஒன்றை தொடங்கினர். 2015-ல் செப்டம்பர் மாதம் நானா படேகர் மற்றும் நடிகர் மகரன்ட் அனஸ்பியூர் ஆகியோர் இணைந்து NAAM Foundation-ஐ தொடங்கினர். NAAM Foundation நோக்கம் கிராமங்களில் தேவைப்படும் வசதிகளான கட்டமைப்புகள், கல்வி, வேலைவாய்ப்பு, உணவு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை மேற்கொண்டு அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதே.

2016-ல் மகாராஷ்டிராவில் உள்ள kutubkheda, kaudar என்ற இரு கிராமங்களை NAAM Foundation தத்தெடுத்து உள்ளனர். இந்த கிராமங்கள், குடிபோதைக்கு அடிமையானவர்கள், நெருப்புக்காக மரத்தை அதிகம் வெட்டுவது, தீவிரத் தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்டவையை அடிப்படையாக வைத்து தேர்ந்தெடுத்தனர்.

வறட்சியால் பாதிக்கப்படும் விவசாயிகள் வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாததால் உயிரை விடும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். இதற்கு நிரந்த தீர்வு கிடைக்க NAAM Foundation முயற்சித்து வருகிறது. விவசாயத்தில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு விவசாயிகளுக்கு நன்மை விளையும் பணியை மேற்கொள்ள NAAM Foundation மற்றும் குர்ஷி சேவா கேந்திர என்ற விவசாய தன்னார்வு அமைப்பு இணைந்தனர்.

2018-ல் விவசாயிகள் தற்கொலை குறித்து பேட்டி அளித்த நானா படேகர், “ மகாராஷ்டிராவில் உள்ள லதூர், பீட் உள்ளிட்ட பல மாவட்டங்களில் விவசாயிகள் வறட்சியால் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. தன்னார்வு அமைப்பு மூலம் மன அழுத்தத்தில் உள்ள விவசாயிகளுக்கு உளவியல் சார்ந்த உதவிகளை வழங்கி வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

பீட் மாவட்டத்தில் உள்ள அர்வி மற்றும் marathawada பகுதியில் உள்ள பல கிராமங்களில் நீர் மேலாண்மையை தன்னிச்சையாக செயலாற்றி வருகிறது நானாவின் NAAM Foundation.

வறட்சி பாதித்த கிராமங்களுக்கு தேவையான வசதியை மேற்கொள்வது, விவசாயிகளுக்கு துணையாக இருப்பது, தன் வருமானத்தை ஏழை மக்களுக்கு வழங்குவது என மக்கள் மீது அக்கறை கொண்ட நானா படேகர் இந்த தலைமுறை மக்களின் ஹீரோ ஆவார்.

” இல்லாதவர்களுக்கு இருப்பார்கள் இருப்பதை பகிர்ந்து கொண்டால் இங்கு இல்லாமை என்பதே இல்லாமல் போய் விடும் “.
Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader