நாசா வெளியிட்ட சூரியன் மேற்பரப்பின் தெளிவான புகைப்படமா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
நாசா வியந்தது, நாசா கண்டுபிடிப்பு, நாசா அறிவித்தது என பலமுறை விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவை வைத்து வதந்திகளும், தவறான தகவல்களும் உலக அளவில் பரப்பப்படுவதை பார்த்து வருகிறோம்.
இந்நிலையில், நாசா வெளியிட்டுள்ள சூரியன் மேற்பரப்பின் தெளிவான புகைப்படம் என இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் பல மொழிகளில் பகிரப்பட்டு வருகிறது. நாசாவை குறிப்பிட்டு பகிரப்படும் இப்புகைப்படத்தின் உண்மைத்தன்மை என்னவென்று தெரிந்து கொள்ள ஆராய்ந்து பார்த்தோம்.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ஜனவரி 14-ம் தேதி OPT Telescopes எனும் முகநூல் பக்கத்தில் Jason Guenzel என்பவரின் பெயரைக் குறிப்பிட்டு இப்புகைப்படத்தை வெளியிட்டு இருந்தனர்.
Jason Guenzel என்பவரின் ட்விட்டர் பக்கத்தை தேடுகையில், முழுவதுமாக மென்பொருள் மூலம் உருவாக்கப்பட்ட சூரியனின் புகைப்படம் என்று ஜனவரி 13-ம் தேதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.
This heavily software-processed image of the solar chromosphere reveals the complex nature of the magnetic field within our star.
Walking the thin line between science and art … perhaps blurring it a bit. 😉 #Astrophotography #space #solar #star #power pic.twitter.com/DaG3xjEiZd
— Jason Guenzel (@TheVastReaches) January 13, 2021
இப்படத்தை நாசா வெளியிட்டதாக பதிவிட்ட ட்விட்டர் பக்கத்தின் பதிவில், பகிர்ந்தமைக்கு நன்றி. இதை உண்மையாக உருவாக்கியர் நான்தான். எனது சூரிய தொலைநோக்கி மூலம் சேகரிக்கப்பட்ட புகைப்படங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படம் ” என Jason Guenzel கமெண்ட் செய்து இருக்கிறார்.
Thanks for the share. I am the original content creator.
This is a processed image using photos collected through my backyard solar telescope!
Tweet is here https://t.co/cIHxjlRqw8
— Jason Guenzel (@TheVastReaches) February 7, 2021
வைரல் செய்யப்படும் புகைப்படத்தை நாசா வெளியிட்டதாக அதன் அதிகாரப்பூர்வ இனையதளம் அல்லது சமூக வலைதளங்களில் எந்தவொரு தகவலும் இல்லை.
முடிவு :
நம் தேடலில், நாசா வெளியிட்ட சூரியனின் மேற்பரப்பு என வைரல் செய்யப்படும் புகைப்படத்தை நாசா வெளியிடவில்லை. அமெரிக்க புகைப்படக் கலைஞர் ஜேசன் என்பவரால் உருவாக்கப்பட்ட சூரியனின் டிஜிட்டல் எடிட் படம் என அறிய முடிகிறது.