நாசாவில் பயிற்று மொழியாக தமிழ் இணைக்கப்பட்டதா ?

பரவிய செய்தி

நாசாவில் தமிழ் மொழியும் பயிற்று மொழியாக இணைக்கப்பட்டு உள்ளது. துபாயில் ஓட்டுநர் உரிமம் பெற தமிழிலும் தேர்வு எழுதலாம்.

மதிப்பீடு

விளக்கம்

மெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் பயிற்று மொழியாக தமிழும் இணைக்கப்பட நாசா தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக கூறும் செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

Advertisement

இந்த செய்தி தொடர்பான உண்மைத்தன்மையை குறித்து நாங்கள் ஆராய முற்பட்டோம். செய்தித்தாள் ஒன்றில் வெளியான செய்தியை அடிப்படையாக வைத்து தேடியதில், விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் ட்விட்டர் பக்கத்தில் அது தொடர்பாக கருத்து பதிவிட்டு இருந்ததை காண முடிந்தது.


” மத்திய அரசு தமிழை நிராகரிக்கும் பொழுது நாசா அங்கீகரிக்கிறது ” என ஜூலை 2019-ம் தேதி தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு நியூஸ் லிங்க் ஒன்றையும் பதிவிட்டு இருக்கிறார். அதனை க்ளிக் செய்து பார்க்கையில், Deccan chronicle செய்தியில் நாசாவில் தமிழ் மொழிஇடம்பெறுவது குறித்து வெளியிட்டு உள்ளனர்.

நாசா விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு கற்பித்தல்(எழுத்து தொடர்பு) மொழிகளில் தமிழையும் இணைக்க வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்ட பதிவிற்கு, ” Hi there, could you email us at jwst@lists.nasa.gov? We’d love to add Tamil. Thank you!” என உடனடியாக பதில் அளித்து இருந்ததாக குறிப்பிட்டு இருந்தனர்.

Advertisement


இதையடுத்து, நாசா ட்விட்டரில் அளித்த பதில் குறித்து ட்விட்டர் தளத்தில் தேடி பார்க்கையில் ” NASA Webb Telescope ” உடைய அதிகாரப்பூர்வ ட்விட்டரில் வெளியிட்ட அறிவிப்பை காண முடிந்தது. அதில், ” NASA Webb-ல் ஆர்வமிருந்து, ஆனால் ஆங்கிலம் தவிர்த்து பிற மொழிகளில் கற்றுக் கொள்ள வேண்டுமா ? நாங்கள் 38 மொழிகளில் தகவல் கார்ட்ஸ் கொண்டிருக்கிறோம். இங்கே உங்களின் மொழியை பார்க்கவில்லை என்றால், எங்களுக்காக மொழி மாற்றம் செய்யுங்கள். நாங்கள் அதிக அளவில் இணைக்க உள்ளோம் ” என ஹிந்தியில் மொழி மாற்றம் செய்த தகவல் கார்டையும் பதிவிட்டு இருந்தனர்.


அந்த ட்விட்டரில் KRS என்பவர் கர்ணபிரான் ரவிசங்கர் மூலம் தமிழ் மொழியில் மொழி மாற்றம் செய்த தகவல் கார்டையும் இணைத்து தமிழ் மொழியை இணைக்குமாறு தெரிவித்து இருந்தார். அதற்கு பதில் அளித்த NASA Webb Telescope, தமிழையும் இணைத்துக் கொள்வதாக தெரிவித்து இருந்தது.


இதையடுத்து, NASA Webb Telescope உடைய அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்க்கையில், James webb space telescope குறித்த தகவல் கார்டு ஆனது பல்வேறு மொழிகளில் மொழி மாற்றம் செய்து பதிவிட்டு இருந்தது.

அதில், இந்தியா மொழிகளில் தமிழ், ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி உள்ளிட்ட மொழிகள் இடம்பெற்று உள்ளன. பல மொழிகளை இணைக்க நாசா ஆர்வம் காட்டி உள்ளது.

முடிவு :

நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி, நாசாவின் ” NASA Webb Telescope ” உடைய அதிகாரப்பூர்வ தளத்தில் பயிற்று மொழியாக தமிழ் மொழி இணைக்கப்பட்டு இருக்கிறது உண்மையே.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button