தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவை பாகிஸ்தான் வீரர் பாராட்டியதாக பரவும் போலி ட்விட்டர் பக்க பதிவு !

பரவிய செய்தி
டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்காக தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் ட்விட்டரில் பாராட்டு, தனது தோல்விகாக பாகிஸ்தான் மக்களிடம் மன்னிப்பும் கோரினார்.
மதிப்பீடு
விளக்கம்
2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பெற்ற முதல் தங்கப்பதக்கம் இதுவே. இந்நிலையில், தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பாகிஸ்தான் நாட்டின் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் தன் ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி பதிவிட்டதாக இப்பதிவு இந்திய சமூக வலைதளங்கள் மற்றும் செய்திகளிலும் கூட வெளியாகி வருகிறது.
உண்மை என்ன ?
எனினும், @ArshadNofficial எனும் ட்விட்டர் ஐடி-யில் அதே ட்வீட் பதிவு இடம்பெற்று இருக்கிறது. அதிகம் கவனம் பெறவில்லை என்பதால் இப்பதிவு நீக்கப்படவில்லை. இந்த ட்விட்டர் பக்கம் ஆகஸ்ட் 2020-ல் தொடங்கப்பட்டு இருக்கிறது.
ஆனால், பாகிஸ்தான் விளையாட்டு வீரர் அர்ஷத் நதீம் பெயரில் உள்ள இவ்விரு ட்விட்டர் பக்கங்களும் போலியானது, அவருடைய அதிகாரப்பூர்வ பக்கங்கள் அல்ல. பாகிஸ்தான் நாட்டின் தி டவ்ன் செய்தியின் விளையாட்டு பிரிவைச் சேர்ந்த அப்துல் காஃப்பர் என்பவர், @Arshadnadeem76 என்ற பக்கமே அர்ஷத் நதீம் உடைய அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கம் என்பதை அவர் உறுதி செய்ததாக ட்விட்டர் பக்கத்தில் படத்துடன் பகிர்ந்து இருந்தார்.
Original Twitter handle of #ArshadNadeem
Its @Arshadnadeem76
He confirmed me.@ShirazHassan pic.twitter.com/lbSZnaI3mJ— Abdul Ghaffar (Replay, Dawn News) (@GhaffarDawnNews) August 7, 2021
@Arshadnadeem76 என்ற பக்கத்தில் வைரலாகும் ட்வீட் போன்று எந்த பதிவுகளும் இல்லை. தன்னுடைய பெயரில் வேறு எந்த ட்விட்டர் பக்கங்களும் எனக்கு இல்லை என அர்ஷத் நதீம் முன்பே ஆகஸ்ட் 5-ம் தேதி பதிவிட்டு இருக்கிறார்.
— Arshad Nadeem (@Arshadnadeem76) August 5, 2021
இந்த ட்விட்டர் பக்கம் ஆகஸ்ட் 2020-ல் தொடங்கப்பட்டுள்ளது. அதன் பிறகே போலியான பக்கங்கள் தொடங்கப்பட்டு இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவை பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் ட்விட்டரில் பாராட்டி பதிவிட்டதாக பரவும் ட்வீட் ஆனது போலியான ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியிடப்பட்டு இருக்கிறது என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.