சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் !

பரவிய செய்தி

சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண்கள் கட்டாயம் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார். இந்த ஆண்டு முதலே சித்த மருத்துவ படிப்புக்கும் நீட் தேர்வு முறைப்படி மாணவர் சேர்க்கை.

மதிப்பீடு

விளக்கம்

நாடு முழுவதிலும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வுகள் அடிப்படையில் மாணவர்களின் சேர்க்கை நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு தொடர்பாக எதிர்ப்புகள் நிகழும் தமிழகத்தில் இந்திய மருத்துவ முறையான சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் என்ற செய்தி வெளியாகி வருகிறது.

Advertisement

2018-19 ஆண்டுக்கான இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என அறிவித்து மத்திய ஆயுஷ் அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியது. எனினும், அதற்கு சென்ற ஒரு வருடம் மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. சென்ற ஆண்டு வரையில் 12-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி ஆகிய படிப்புகளுக்கான இடங்கள் நிரப்பப்பட்டு வந்தன. ஆனால், மீண்டும் 2019-20 ஆண்டுக்கான சுற்றறிக்கையை மத்திய ஆயுஷ் அமைச்சகம் அனுப்பியுள்ளது.

அதன்படி, வருகிற 2019-20 கல்வியாண்டில் இருந்து சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் இடங்கள் நிரப்பப்படும் என தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர், ” சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு நீட் மதிப்பெண்கள் கட்டாயம். யோகா மற்றும் இயற்கை மருத்துவம் படிப்புகளுக்கு 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் ” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி போன்ற இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு 393 இடங்கள் உள்ளன. அதில், இயற்கை மருத்துவம் மற்றும் யோகா ஆகிய படிப்புகளுக்கு உள்ள 60 இடங்கள் போக மீதமுள்ள 333 இடங்களுக்கான சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும்.

மற்ற மாநிலங்களில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி போன்ற இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்பதை போன்று இனி தமிழகத்திலும் நீட் கட்டாயம் என செயல்படுத்தப்படும்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button