நீட் தேர்விற்கு வழக்கறிஞர் நளினி சிதம்பரம் ஆதரவா ?

பரவிய செய்தி

காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம் அவர்களின் மனைவி நளினி சிதம்பரம் நீட்டிற்கு ஆதரவாக வாதாடுவாரம். ஆனால், நாம் நீட் வேண்டாம் என்று தடுக்க காங்கிரஸ்க்கு ஓட்டு போட வேண்டுமாம்.

மதிப்பீடு

சுருக்கம்

2017  ஆகஸ்ட்டில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு கொண்டு வந்த அரசாணைக்கு எதிராக, நீட் தேர்வில் தமிழகத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என நளினி சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார்.

விளக்கம்

நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் வெளியான தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை விரும்பாத மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என அறிவித்தனர், ஆளும் அதிமுக கட்சி சார்பில் வெளியான அறிக்கையில் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தப்படும் என கூறி இருந்தனர்.

காங்கிரஸ் கட்சி நீட் தேர்விற்கு விலக்கு அளிக்கப்படும் எனக் கூறும் போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் மனைவி நளினி சிதம்பரம் நீட் வேண்டும், நீட்டிற்கு ஆதரவாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததாக சமூக வலைதளங்களில் பதிவுகள் அதிகம் பகிரப்பட்டன.

Advertisement

2017 ஆகஸ்ட் மாதம், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு அளிக்க வேண்டும் என்ற அரசாணையை தமிழக அரசு கொண்டு வந்தது. இந்த அரசாணையை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு வழங்கப்பட்டது.

இந்நேரத்தில் தான், தமிழக அரசு நீட் தொடர்பான அவசர சட்டத்தை தாக்கல் செய்யும் பட்சத்தில் அதற்கு எதிராக வாதிட வேண்டும் என நீட் தேர்வில் வெற்றிப் பெற்ற மாணவர்கள், பெற்றோர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரத்திடம் வலிறுத்த வந்தாக அன்றைய செய்திகளில் வெளியாகி உள்ளது.

செய்தியாளருக்கு  நளினி சிதம்பரம் அளித்த பேட்டியில், ” தமிழக அரசின் நீட்டிற்கு எதிரான ஓராண்டு விலக்கு கொண்டு வந்த அவசர சட்டத்தை குடியரசுத்தலைவரின் ஒப்புதல் வாங்கும் பட்சத்தில் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் வழக்கு தொடர்வோம். இந்த அவசர சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது.  முதலில் இந்த சட்டம் கிராமப்புற மாணவர்களுக்கானது என்பது ஏமாற்று வேலை.  இந்த சட்டம் தனியார் பள்ளியில் மாநிலக் கல்வி முறையில் படிக்கும் மாணவர்களுக்காக போடப்படுகிறது. 10 ஆண்டுகளில் +2 மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்ட 30,000 மருத்துவ மாணவர்களில் 250 மாணவர்கள் மட்டுமே அரசு பள்ளியில் படித்தவர்கள்.  அவசர சட்டம் கொண்டு வரும் பட்சத்தில் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால தடை வாங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வோம் ” என கூறி இருந்தார்.

Advertisement

2017-ல்  ஜூலை மாதத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் , தனியார் மருத்துவக்கல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீடு சீட்களில் மாநில கல்விமுறையில் பயின்ற மாணவர்களுக்கு 85 சதவீதம், CBSE மாணவர்களுக்கு 15 சதவீதம் என்ற தமிழக அரசின் முடிவிற்கு எதிராக,   CBSE மாணவர்களுக்கு ஆதரவான (W.P .17528/2017)வழக்கில்  வழக்கறிஞர் உமா என்பவரின் சார்பாக நளினி சிதம்பரம் ஆஜராகினார். அந்த வழக்கு 2017 ஜூலை 14-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

அரசியல் கட்சினர் கூட நளினி சிதம்பரம் நீட் தேர்விற்கு ஆதரவாக இருப்பதாக குற்றம்சாற்றியுள்ளார். நளினி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில்  நீட் தேர்விற்கு ஆதரவாக வழக்கு தொடுத்தார் என எந்த செய்தியில் வெளியாகவில்லை. ஆனால், நீட் தேர்வில் வெற்றிப் பெற்ற தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக இருந்தார் என்பது உண்மையே !

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம் / Proof Links

Tags

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
PHP Code Snippets Powered By : XYZScripts.com
Close
Close