நேரு கையில் வாளியுடன் இருப்பதாகப் பரப்பப்படும் போலியாக எடிட் செய்யப்பட்ட புகைப்படம் !

பரவிய செய்தி
கூடை தூக்கி பாத்திருப்போம்… சொம்பு தூக்கி பாத்திருப்போம்.. வாளி தூக்கி பாத்ததில்லை… நேரு மாமா
மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்தியாவின் கடைசி வைஸ்ராயான மவுண்ட்பேட்டனின் மனைவி எட்வினாவுடன் செல்லும் போது கையில் வாளி எடுத்துக் கொண்டு செல்வதாகப் புகைப்படம் ஒன்று வலதுசாரி ஆதரவாளர்களால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
Did he also carry toilet tissues for the president like he carried lotta for Edwina’s ablutions? https://t.co/F5mTblX3c6 pic.twitter.com/zFKPj341My
— ࿗ இளையபிராட்டி ࿗ (@Kunthavi5) June 21, 2023
If there was a joker who was perpetually happy in the company of the people who were killing, jailing, looting and terrorizing Indians, it was Jawaharlal Nehru. pic.twitter.com/X2g3KsJzZW
— Rakesh Krishnan Simha (@ByRakeshSimha) June 1, 2023
உண்மை என்ன ?
பரவக் கூடிய படத்தினை கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடுகையில், ‘Himachal Archives’ எனும் பேஸ்புக் பக்கத்தில் பரவக் கூடிய படத்துடன் வேறு சில படங்களையும் சேர்த்துத் தொகுப்பாகப் பதிவிட்டிருப்பதைக் காண முடிந்தது. அப்பதிவில் 1948ம் ஆண்டு மே மாதம் விடுமுறையின் போது சிம்லாவில் அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு மற்றும் மவுண்ட்பேட்டன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Himachal Archives உள்ள அப்பதிவில் ‘நன்றி : புகைப்படப் பிரிவு, இந்திய அரசு’ என்றுள்ளது. இந்திய அரசால் வெளியிடப்பட்ட அந்த படத்தில் நேருவின் கையில் வாளி எதுவும் இல்லை.
மேலும் இது பற்றித் தேடியதில், ‘wiki media’ எனும் தளத்திலும் நேரு மற்றும் மவுண்ட்பேட்டனின் மனைவி இருக்கக்கூடிய புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. அதிலும் நேருவின் கையில் வாளி இல்லை.
அதே போல் ‘Get Archive’ மற்றும் ‘Picryl’ போன்ற தளங்களிலும் நேரு மற்றும் மவுண்ட்பேட்டன் குடும்பத்தினர் 1948ம் ஆண்டு சிம்லா சென்ற புகைப்படங்கள் உள்ளது. இவற்றைக் கொண்டு பரவக் கூடிய படம் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க : நேரு இந்துக்களுக்கு எதிராக அரசியலமைப்பு சட்டப் பிரிவு 30A-வை சேர்த்ததாக பாஜகவினர் பரப்பும் வதந்தி !
இதற்கு முன்னர் ஜவஹர்லால் நேருவை இந்துக்களுக்கு எதிராக அரசியலமைப்பு சட்டப் பிரிவில் 30A-வை சேர்த்ததாகவும், அவர் ஆர்.எஸ்.எஸ். பயிற்சியில் கலந்து கொண்டதாகவும் போலி செய்திகளைப் பரப்பினர். அவற்றின் உண்மைத் தன்மை குறித்து யூடர்னில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : அரை டவுசருடன் நேரு : இது ஆர்.எஸ்.எஸ் பயிற்சி அல்ல
முடிவு :
நம் தேடலில், ஜவஹர்லால் நேரு கையில் வாளி உடன் செல்வதாக பரப்பப்படும் புகைப்படம் உண்மையானது அல்ல. அப்படத்தைப் போலியாக எடிட் செய்து பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.