நேதாஜி உருவம் பொறித்த 1 லட்சம் மதிப்புடைய நோட்டு உண்மையா?

பரவிய செய்தி
நேதாஜி உருவம் பொறித்த 1 லட்ச ரூபாய் நோட்டு !
மதிப்பீடு
சுருக்கம்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் “ Bank of independence “ மூலம் வெளியிட்ட 1 லட்சம் ரூபாய் நோட்டை 2010-ல் நேதாஜியின் 113-வது பிறந்தநாள் அன்று போபாலில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
இந்திய ரூபாயில் நேதாஜி உருவம் இடம்பெற வேண்டும் என கோரிக்கை வைப்பவர்களுக்கு இச்செய்தி உற்சாகம் அளிக்கும்.
விளக்கம்
ரிசெர்வ் வங்கி அச்சிடும் இந்திய ரூபாய் நோட்டுகளில் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய நேதாஜி உருவம் அச்சிட வேண்டும் என்ற எண்ணம் பலரிடம் இருந்து வருகிறது. சமீபத்தில் புதிய ரூபாய் நோட்டுகள் வெளியாகிய போதும் நேதாஜி உருவம் அச்சிட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், நேதாஜி உருவம் பொறித்த சுதந்திரத்திற்கு முன்னான ஒரு லட்சம் ரூபாய் நோட்டு ஒன்று பற்றிய செய்தியை பார்க்க முடிந்தது.
நேதாஜி நோட்டு :
வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி சுதந்திர இந்தியாவிற்கு முன்பு 1944-ம் ஆண்டு ஏப்ரலில் தற்போதைய மியான்மர்(பர்மா) ரங்கூன்(தற்போது யங்கூன்) நகரில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் அசாத் ஹிந்த் வங்கி அல்லது “ Bank of independence “ என்ற வங்கியை தொடங்கியுள்ளார். உலகெங்கிலும் இருந்த இந்தியர்கள் அளிக்கும் நன்கொடையை கையாளுவதற்கு இந்த வங்கி உருவாகியது.
“ 1 லட்சம் மதிப்புடைய நோட்டின் இடப்புறத்தில் நேதாஜி உருவமும், வலப்புறத்தில் பிளவுப்படாத இந்திய ராஜ்யத்தின் வரைபடத்துடன் சுதந்திர பாரதம் என ஹிந்தி மொழியில் இடம்பெற்று உள்ளது. மத்தியில் “ ஜெய்ஹிந்த் “ என ஆங்கிலத்திலும், “ I Promise to pay the bearer the sum of one lac “ எனக் கீழே இடம்பெற்றுள்ளது “.
நேதாஜியின் 1 லட்சம் நோட்டில் மூவர்ணக் கொடியும் இடம்பெற்று இருக்கும். சுதந்திர இந்தியாவை உருவாக்க பிரிட்டிஷ்காரர்கள் உடன் போர் புரிவதற்காக உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் அளித்த நன்கொடையை நிர்வகிக்கவே “ bank of independence “ உருவாகியது.
1980-ல் ராம் கிஷோர் துபே என்பவர் தன் தாத்தாவின் பழைய ராமாயணப் புத்தகத்தில் நேதாஜியின் உருவம் பொறித்த 1 லட்சம் மதிப்புடைய நோட்டை கண்டுள்ளார். அவரின் தாத்தா ப்ரகில்லால் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர் ஆவார்.
“ 2010 ஜனவரி 23-ம் தேதியன்று நேதாஜியின் 113 வது பிறந்தநாள் நினைவையொட்டி நேதாஜி உருவம் அச்சிட்ட 1 லட்சம் மதிப்புடைய நோட்டு மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது “
நேதாஜி உருவம் பொறித்த 1 லட்சம் மதிப்புடைய நோட்டு பற்றி இங்கு பலரும் அறியாமலே உள்ளனர்.
“ தேசத்தின் சுதந்திரத்திற்கு போராடிய தன்னலமற்ற வீரரே நேதாஜி “