நெதர்லாந்து பள்ளிகளில் பகவத்கீதை கட்டாயமா ?

பரவிய செய்தி
நெதர்லாந்து நாட்டின் சட்டத்தின் படி டச்சு குழந்தைகளுக்கு பகவத்கீதை வகுப்பு கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.
மதிப்பீடு
விளக்கம்
நெதர்லாந்து நாட்டில் உள்ள பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பில் இருந்து படிக்கும் மாணவர்களுக்கு பகவத்கீதை வகுப்புகள் கட்டாயம் என அந்நாட்டின் சட்டம் கூறுவதாக பதிவிட்டு வருகின்றனர்.
இரு குழந்தைகள் கையில் பகவத்கீதை புத்தகத்தை வைத்து இருக்கும் புகைப்படத்துடன் இந்த செய்தி பகிரப்படுகிறது. சமீபத்தில் india 360 என்ற முகநூல் பக்கத்தில் இதே புகைப்படத்தை பதிவிட்டு இருந்தனர்.
நெதர்லாந்து நாட்டின் கட்டாய பாடத்திட்டத்தில் பகவத்கீதை வகுப்புகள் பற்றி இடம்பெறவில்லை. இந்த தகவல்கள் நெதர்லாந்து நாட்டின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. அந்நாட்டில் உள்ள கட்டாய பாடத்திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
நெதர்லாந்து நாட்டில் இப்படியொரு சட்டம் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தால் அவ்வாறான செய்திகள் எங்கும் இடம்பெறவில்லை. மேலும், செய்திகளிலும் கூட அது தொடர்பான தகவல் ஏதுமில்லை.
வைரலாகும் படம் :
நெதர்லாந்து நாட்டுடன் தொடர்புப்படுத்தி வைரலாகும் படமானது Iskcondesiretree.com இல் ” Beautiful Little Vaisnava ” என்ற தலைப்பில் 2013 செப்டம்பர் 20-ம் தேதி பதிவிட்டு உள்ளனர். அதில், நெதர்லாந்து நாடு குறித்த எந்த தகவலும் இல்லை.
நெதர்லாந்து நாட்டில் டச்சு ஹிந்து பள்ளிகள் இருக்கின்றன. ஆனால், அந்நாட்டின் சட்டத்தில் பகவத்கீதை கட்டாயம் எனக் கூறுவது தவறான தகவலாகும்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.