This article is from Aug 20, 2021

அரசு புதிதாக நியமித்த அர்ச்சகர் சாமி சிலையின் மீது நிற்பதாக பரப்பப்படும் பழைய புகைப்படம்!

பரவிய செய்தி

திராவிட அர்ச்சகர்கள் பக்தி.. ஆலயம் வாழும்

Facebook link

மதிப்பீடு

விளக்கம்

கோவிலில் கருட வாகனம் போன்ற சிலை மீது அலங்கரிக்கப்பட்ட சாமி சிலையின் அருகே நிற்கும் அர்ச்சகர் ஒருவர் சிலை வைக்கப்பட்டு இருக்கும் வாகனத்தின் மீது ஏறி நிற்கும் புகைப்படத்தை காண்பித்து தமிழ்நாடு அரசால் ” அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் ” திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட அர்ச்சகர் என ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

Twitter link | Archive link 

உண்மை என்ன ?

சமீபத்தில் தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட அர்ச்சகர்கள் இவ்வாறான காரியத்தை செய்து இருந்தால் அரசியல் கட்சிகள் முதல் செய்தி நாளிதழ் வரை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருப்பார்கள். மேலும், பரப்பப்படும் புகைப்படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்கிற விவரங்களை யாரும் அளிக்கவில்லை.

ஆகையால், புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2020-ம் ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி rajmadame enum ட்விட்டர் வாசி இதே புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.

புகைப்படம் குறித்து மேற்கொண்டு தேடுகையில், 2020 பிப்ரவரியில் நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக் உடைய ட்விட்டர் பதிவின் கமெண்டில் ஒருவர் இப்புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.

Twitter link | Archive link  

2021 ஆகஸ்ட் 14-ம் தேதி தமிழ்நாடு அரசு அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தின் கீழ் 58 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கி இருக்கிறது. ஆனால், தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட அர்ச்சகர் சாமி சிலையின் மீது ஏறி நிற்பதாக பரப்பப்படும் புகைப்படம் கடந்த ஆண்டு பதிவுகளிலேயே இடம்பெற்று இருக்கிறது. எனினும், பரப்பப்படும் புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை.

மேலும் படிக்க : கார், பைக் கழுவுறவங்களா அர்ச்சகர் ஆக்கினால்… வைரலாகும் வன்ம பதிவுகள் !

மேலும் படிக்க : ஆகமத்தை, இறைவனை மதிக்கவில்லை! பழைய புகைப்படத்தை பகிர்ந்து பொங்கும் காயத்ரி ரகுராம்

தமிழ்நாடு அரசு ” அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் ” திட்டத்தின் கீழ் புதிய அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கியதில் இருந்து தொடர்ந்து பழைய புகைப்படங்கள், தவறான வீடியோக்களை வைத்து பல போலிச் செய்திகளை பரப்பி வருகிறார்கள் என்பதை தொடர்ந்து பதிவிட்டு வருகிறோம்.

மேலும் படிக்க : அரசு நியமித்த அர்ச்சகருக்கு ஒன்றுமே தெரியவில்லை என இந்து மக்கள் கட்சி பரப்பும் தவறான வீடியோ !

மேலும் படிக்க : அனைத்து சாதி அர்ச்சகர் பூணூல் போட்டு இருக்கும் லட்சணம் என தவறாக பரப்பப்படும் செல்ஃபி புகைப்படம் !

முடிவு : 

நம் தேடலில், தமிழ்நாடு அரசால் புதிதாக நியமிக்கப்பட்ட அர்ச்சகர் சாமி சிலையின் மீது ஏறி நிற்பதாக பரப்பப்படும் புகைப்படம் சமீபத்தில் எடுக்கப்பட்டவை அல்ல, கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader