1955ல் நாசா எடுத்த ஈகிள் நெபுலாவின் புகைப்படம் என நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட தவறான செய்தி !

பரவிய செய்தி

”ஈகிள் நெபுலா” 1955ல் நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி எடுத்த புகைப்படம் VS கடந்த ஆண்டில் விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த ஈகிள் நெபுலாவின் மிகத்துல்லியமான சமீபத்திய புகைப்படம்

Archive Link

மதிப்பீடு

விளக்கம்

1955ல் நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி(Hubble Telescope) எடுத்த ஈகிள் நெபுலா(Eagle Nebula) புகைப்படமும், தற்போது 2022ல் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மிகத் துல்லியமாக எடுத்த புகைப்படமும் என நியூஸ் 7 செய்தித்தளம் அக்டோபர் 20ம் தேதி ஒரு நியூஸ் கார்டை தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டிருந்தது. அந்த பதிவில் உள்ள தவறான தகவலைப் பார்ப்போம்.

உண்மை என்ன ?

கோள்கள், நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன்களின் படங்களை எடுக்க ஹப்பிள் தொலைநோக்கி(Hubble Telescope) நாசாவால் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. டிரில்லியன் கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள விண்மீன்களை அது கண்டுள்ளது.

நெபுலா(Nebula) என்பது விண்வெளியில் உள்ள தூசி மற்றும் வாயுவின் மாபெரும் மேகம்.  ஈகிள் நெபுலா(Eagle Nebula) விண்மீன் மண்டலத்தில் சுமார் 7,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

நியூஸ் 7 தமிழ் செய்தித்தளம் தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்ட நியூஸ் கார்டில், ஹப்பிள் தொலைநோக்கி(Hubble Telescope) ஈகிள் நெபுலாவை(Eagle Nebula) 1955ல் புகைப்படம் எடுத்ததாகப் பதிவிட்டுள்ளது.

உண்மையில், நாசாவால் ஹப்பிள் தொலைநோக்கி(Hubble Telescope) விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ஆண்டு 1990. இது நாசாவின் அதிகாரப்பூர்வ இணையத்தில் பதிவிட்டுள்ளது.

மேலும், ஹப்பிள் தொலைநோக்கி எடுத்த ஈகிள் நெபுலாவின்(Eagle Nebula) புகைப்படத்தை முதன்முதலில் 1995ல் நாசா வெளியிட்டது.

1955ல் எடுக்கப்பட்ட ஈகிள் நெபுலாவின்(Eagle Nebula) புகைப்படம் என நியூஸ் 7 பயன்படுத்தியது 2015ல் அதே ஹப்பிள் தொலைநோக்கி(Hubble Telescope) எடுத்த வேறொரு புகைப்படம். இது ஹப்பிள் தொலைநோக்கியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

Photo Link

ஈகிள் நெபுலா என்பது நட்சத்திரங்களை உருவாக்கும் பகுதியான Pillars of Creation உட்பட பல பிரபலமான கட்டமைப்புகளின் இருப்பிடமாகும். Pillars of Creation என்பது ஈகிள் நெபுலாவின் ஒரு பகுதி. நியூஸ் 7 கார்டில் பயன்படுத்தப்பட்ட புகைப்படம் ஈகிள் நெபுலாவின் ஒரு பகுதியான Pillars of Creation என்பது தெரியவருகிறது.

ஈகிள் நெபுலாவின் புகைப்படத்தில் சிகப்பு நிற வட்டத்தில் உள்ளது Pillars Of Creation.

Photo Link

முடிவு :

நம் தேடலில், முதன்முதலில் 1995ல் தான் ஹப்பிள் தொலைநோக்கி ஈகிள் நெபுலாவை புகைப்படம் எடுத்தது, 1955ல் அல்ல. 2015ல் நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி எடுத்த ஈகிள் நெபுலாவின் பில்லர்ஸ் ஆப் கிரியேசன் உடைய புகைப்படத்தை 1955 எடுத்த படம் என நியூஸ் 7 செய்தித்தளம் தவறாகப் பதிவிட்டுள்ளது தெரியவருகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader