This article is from Apr 21, 2018

நிபா வைரஸிற்கு மருந்து: சோசியல் மீடியாவில் பரவும் தவறான செய்திகள்.

பரவிய செய்தி

Gelsemium 200 ஹோமியோபதி மருந்தை வாரத்திற்கு மூன்று முறை என 3 வாரங்களுக்கு எடுத்துக் கொண்டால் நிபா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இயலும். பவளமல்லி என்னும் பாரிஜாதம் இலையை கசாயம் போட்டு வடிகட்டி அதில் எலுமிச்சை சாறை விட்டு குடிக்கவும், நோய் வராமல் தடுக்க தினம் ஒரு வேளையும், நோய் வந்தால் மூன்று வேளையும் குடிக்க வேண்டும். இது அனைத்து வைரஸ் காய்ச்சலையும் கட்டுப்படுத்தும். ஆகையால், இது நிபா வைரஸிற்கும் பொருந்தும்.

மதிப்பீடு

விளக்கம்

நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் 14 பேர் உயிரிழந்தனர், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நிபா வைரஸ் தாக்கிய நபர்கள் பெரும்பாலனோர் இறந்து விடுவதால் மக்கள் மத்தியில் நிபா வைரஸ் மிகப்பெரிய அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. காரணம், இதற்கான தடுப்பு மருந்துகள் எங்கேயும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில், நிபா வைரஸ் பாதிப்பு வராமல் தடுக்கவும், ஒருவேளை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் பாதுகாக்க Gelsemium 200 தடுப்பு மருந்து உள்ளதாக வாட்ஸ் ஆஃப், ஃபேஸ் புக் உள்ளிட்டவற்றில் ஒரு தவறான செய்தி பரவி வருகிறது. அதேபோன்று சித்த மருத்துவ குறிப்புகள்படி நிபா வைரசை குணப்படுத்த பவளமல்லி இலை உதவும் என்றும் மற்றொரு செய்திகள் பகிரப்படுகின்றன.

Gelsemium 200 ஹோமியோபதி மருந்தால் நிபா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாக்க முடியும் என்று மருத்துவர்களிடம் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. அதேபோல் ” பவளமல்லி ” இலைகள் மற்றும் அதனுடன் சில மூலிகைகளை சேர்த்து கசாயம் செய்து குடித்து வந்தால் வைரஸ் காய்ச்சலின் வீரியத்தை குறைக்க முடியும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். எனினும், அரசு தரப்பில் சுகாதாரத்துறையால் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் பவளமல்லி கசாயம் அருந்தலாம் என்ற எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

நோயின்றி வாழ்வதே சிறந்த வாழ்வு. ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் புதிது புதிதாக நோய்கள் பெருகிக் கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் சமூக வலைத்தளங்களில் மருந்துங்கள் குறித்த ஆலோசனைகள் அதிகரிக்கிறது. மக்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வரும் மருந்துகள் நோயை குணப்படுத்தும் என்று நம்பி விடுகின்றனர்.

  • ஒவ்வொரு மருந்துக்கும் ஒவ்வொரு தன்மை உண்டு. ஆக, மருத்துவர்களின் தகுந்த ஆலோசனை இன்றி கண்ட மருந்துகளை எடுத்துக் கொண்டால் அது நமக்கே விபரீதமாக மாற வாய்ப்புள்ளது. இயற்கை மருந்தோ அல்லது அல்லோபதி மருந்தோ எதுவாக இருப்பினும் மருத்துவர்களின் ஆலோசனைபடியே எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பொதுவாகவே மருந்துகளால் உடலுக்கு பக்க விளைவுகள் ஏற்படும் என்ற தகவல் பலரும் அறிவதில்லை, ஆனால் மருத்துவர்கள் அறிவர். ஆகையால், ஒவ்வொருவருக்கு ஏற்றவாறு பக்க விளைவுகளை ஏற்படுத்தாத மருந்துகளை மருத்துவர்கள் எடுத்துக் கொள்ள அறிவுறுத்துவர்.
  • சில தருணங்களில் உடலில் வெளிப்புற பகுதியில் தென்படும் அறிகுறிகளை வைத்து நோயை கண்டறிந்து குணப்படுத்தும் மருத்துவர்களுக்கு கூட சில நோய் பாதிப்புகள் பற்றி அறிய பரிசோதனை முடிவுகள் தேவைப்படுகின்றன.
  • அடுத்து மருந்துவரை அணுகாமல் டோசெஜ் அதிகம் உள்ள மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், அதனால் நிச்சயம் உடலுக்கு பாதிப்புகள் ஏற்படும். ஆகையால்தான் டோசெஜ் குறைவாக உள்ள மருந்துகளையே மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
  • மருத்துவரின் அறிவுறுத்தல் இன்றி பயன்படுத்தும் மருந்துகள், ஆன்லைன் மூலம் அறியும் மருந்துகளால் பக்க விளைவுகள் ஏற்படுவது மட்டுமல்லாமல் அதற்கு அடிமையாகக் கூட வாய்ப்புகள் உள்ளன.

நிபா வைரஸ் பாதிப்பிற்காக கேரளா அரசு ஆஸ்திரேலியாவில் இருந்து தடுப்பு மருந்துகளை வரவழைத்து உள்ளது. மேலும், நிபா வைரஸ் பாதிப்பு கோழிக்கோடு, மலப்புரம் பகுதியில் மட்டுமே உள்ளதாக தெரிவித்துள்ளனர், கேரளா முழுவதும் பாதிப்பில்லை. ஆகையால், தமிழகத்தில் அதன் பாதிப்புகள் இல்லை. நிபா வைரஸ் மட்டுமின்றி நோய்களை குணப்படுத்துவது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவும் மருந்துகள் எதையும் மக்கள் எடுத்துக் கொள்வது சரியல்ல. மருத்துவரின் அறிவுறுத்தலின்படி மருந்துகளை எடுத்துக் கொள்வதே சிறந்தது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader